ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-17
சுஜாதா சார் எழுதிய 
தொடருக்குத் தடையா? 

நைலான் கயிறு
சுஜாதா சாரின் முதல் நாவல். 1968 ல் குமுதத்தில் தொடராக...
கணேஷ் – வசந்த் இருவரில் - கணேஷ் மட்டுந்தான்….எண்ட்ரி..
(வசந்த் வேலையையும் கணேஷே பார்த்துக்கொண்டார்!)
அதன் அட்டை வடிவமைப்புக்காக மீண்டும் படிக்கத் தந்தார். (கரும்புதின்னக் கூலி !)
நான் ஒரு விஷுவலுக்காகப் நிறுத்திப் படிச்சதுல...

1. கதைக்களம் ...பம்பாய்... செப்டம்பர் 18 ( அப்போ மும்பைன்னு பேர் வெக்கல)
2. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் சுநந்தாவின் டைரி குறிப்பு...
3. இரண்டடி நீளமுள்ள கட்டை விரல் கனத்தில் நைலான் கயிறு..
இந்த மூன்று விஷயத்தையும் அட்டையில் வெக்கணும்...வெச்சேன்
ஓலைப்பட்டாசு செஞ்சா மாதிரி…இந்த முறை மொட்ட மாடில கொடிக்கட்டிருந்த ஒரு நைலான் கயிறை கொஞ்சம் அறுத்து எடுத்து சுருக்கு முடிச்சு போட்டேன்


அப்பெல்லாம்… கதை நாயகர் சுஜாதா எழுத்துகள் ஏதாவது ஒரு ரூபத்துல நம்மையடையாமல் நாட்கள் நகராது. அப்போதெல்லாம் அவர் எழுதிக் கசக்கிப் போட்ட ’சலவைக்குறிப்பு கூட வார இதழ்களில் அச்சேறி வைரலாகிக் கெடந்த காலம்! ஒவ்வொரு வாரமும் தொடரும்னு போடுற கதையோ கட்டுரையோ… |
பிரேக் த ரூல்ஸ் நாயகரின் சஸ்பென்ஸ்களால் …வைரஸ் அவார்னஸ் இல்லாம கால்சியக் குறைபாடு வந்தா மாதிரி.. நம் நகங்களை  நாமே க..டி..ச்…சு க்…க…டி…ச்..சு ..
சிலசமயம் ஓவராக் கடிச்சு ரத்தமே வந்துரும்…!...

யெஸ்ஸ்ஸ்ஸ்..…(அப்போ மெய்யாலுமே வந்துச்சு…)
அவரோட  ’ரத்தம் ஒரே நிறம்’ குமுத்ததுல வந்துச்சு! 
அந்த சம்பவத்துக்கு முன்னதாக கருப்பு சிவப்பு வெளுப்பு’ ன்னு சுஜாதா தொடர் பெரிய..எதிர்பார்ப்புடன் குமுதத்தில் வெளியானது! ம.செ. சார் ஓவியங்களுடன்….கதையின் நாயகன் பெயர் கூட ரத்தினம்னு படிச்சதா என் நினைவோடையில்… அப்போதும் எல்லோராலும் கொண்டாப்பட்ட சுஜாதா சாரோட அந்தத் தொடருக்கு 80 களில் திடீர்ன்னு ….ஒரு சிரமதசை!


அப்போதைய குமுதம் இதழில்…வெளிவந்து ஓரிரு வாரங்ங்ங்ங்ங்களேய்ய்ய்யான நிலையில் அந்தக் கருப்பு சிவப்பு என்னும் தொடரை வாத்யார் தொடரக்கூடாது… மீறினால் ‘எழுதிய வலது கையைவெட்டுவோம்னு’ தினம் தினம் போன் கால்! |மூன்று வாரம் வந்து மீதி எழுதப்படாத மீதிக்கதையில் ஒரு இனத்தை இழிவுபடுத்தக்கூடும் என வராதபுயலுக்கு வானிலை அறிக்கை!
மறுவாரம் கட்டம் கட்டி குமுதம் எடிட்டர் ஏ.எஸ் பி வருத்தம் சொல்லி… அந்தத் தொடர் நிறுத்தப்பட்டது. அது தொடர்பாக  

///சுஜாதா சார்  ஒரு கேள்வி பதிலில்:

டான் பிரவுனின் ‘டாவின்சி கோட்’ படித்தீர்களா? தமிழில் ஏன் அது மாதிரி வருவதில்லை? _ஜி. ஜோசப்ராஜ், புதுக்கோட்டை.

தமிழில் டாவின்சி ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் சிப்பாய் கலகத்தை ஆராய்ச்சி செய்து அதில் ஒரு தமிழன் கலந்து கொள்வதாக ‘கருப்பு சிவப்பு வெளுப்பு’ என்ற தொடர்கதை ஆரம்பித்தேன். ‘கையை வெட்டுவேன் நிறுத்து’ என்றார்கள். எனக்கு இடது கையால் ஷேவ் செய்து பழக்கமில்லாததால் நிறுத்தி விட்டேன். என்னதான் ‘ரத்தம் ஒரே நிறம்’ என்று எழுதினாலும் ஆரம்ப உற்சாகத்தை இழந்துவிட்டேன்.… ///

’இடது கையால் ஷேவிங்… என்று அந்தக் காண்ட்ரவர்ஸியை மேலும் வளரவிடாமல் ஈஸியா ஒற்றை வரியில் அந்த சீரியஸ் மேட்டரை காமெடி கலந்து சிக்ஸருக்குத் தூக்கினார்.. (சண்டியர் என்ற பெயர் மாறிய ’விருமாண்டி’ போல) பின் நின்று ஒரு சிறு ’சமூக இடைவெளி’ விட்டு பெயரை மாற்றி … ரத்தம் ஒரே நிறம். என்னும் புதிய தொடரில் புது சரித்திரம் படைத்தார்! அப்போது சாதி சங்கங்கள் எல்லாம் இன் சைலண்ட் மோட்!

சிப்பாய்க் கலகத்தின் ஊடாக உள்ளூர் கதை மாந்தர்கள்… ஆலப்பாக்கம் முத்துக்குமரன், பூஞ்சோலையுடன் ஆஷ்லி,  மெக்கென்ஸி, சிலம்பாட்டம், என்ஃபீல்டு துப்பாக்கி ரவைகள், சிப்பாய்க் கலகம் பன்றிக்கொழுப்பு, என வழுக்கிச் செல்லும் வைரல் வேகம். மற்றொரு சரித்திரக் கதையில் அவரது ஃபேவோரைட்.. கணேஷ் – வசந்தை விட்டுக்கொடுக்காமல் காந்தளூரில் வசந்தகுமாரனையும், கணேசப்பட்டரையும் வெச்சு பல ‘சம்பவங்களை’ச் செஞ்சு காட்டியிருப்பார்!மேற்படி அவரோட டேட்டாஸ் யாவும் ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிட்டு… அவர் நட்பு வேண்டி ஓலைப்பட்டாசு அட்டை வடிவமைப்பு செய்து வீசிய நட்பு வலை ( Vol 16)
நைலான் கயிறு மூலம் மேலும் வலுவடைந்து மயிலாப்பூரில் நிலைகொண்டது. 
என் வீட்டு விசேஷத்துக்கு அவர் வந்ததும்… ஒரு சமயம் நானும் அவரும் மட்டும் பேசிக்கொண்டே திருச்சிக்கு போய்வரும் அளவுக்கு வலுவடைந்ததும்… என் பாக்யம்!! 


சரி இப்போ சுறுக்கா அந்த சுருக்குக் கயிறு மேட்டருக்கு வருவோம்!
ஓலைப்பட்டாசு ஸ்கேன் பண்ணா வெடிச்சுரும்னு சொன்ன அதே டிடிபி ஆப்பரேட்டர்…அந்த ஓலைப்பட்டாசு புக் கொடுத்த வகையில் ஸ்னேகம் திக், இந்த வாட்டி லூசாய்யா நீயின்னு கேக்கல…ஆனால்…
’முடிச்சோட ஸ்கேன் பண்ணனுமா’ ஆச்சரியக்குறியுடன் …இதே வேலையாப்போச்சு… நைலான் கயிறு மெல்ட்டாகாம இருந்தா சரின்னு’ சொல்லிட்டே வழக்கம் ரெண்டு ஃப்ளாப்பி டிஸ்க்ல லோடட்.! 


இப்போ..
முடிச்சு இமேஜ் ரெடி…அதுக்குள்ள அப்போதைய சிவப்பு மாடி பஸ்…ஹோட்டல் நடனர்கள் …டைரி அதுல செப்டம்பர் 18ம் தேதி, அப்பார்ட்மெண்ட்….ஓவர் ஓவர்..\\
கூடவே ஃபாண்டோகிராபர் என்னும் மென்பொருள் கொண்டு… STENCIL English Fontக்கு இணையாக தமிழில் நைலான் கயிறு என ஒரு எழுத்துருவைச் செதுக்கி எடுத்தேன்.
அந்த எழுத்துருவை நான் தற்போது ஃபாண்ட் லேப் ஸ்டுடியோ 2.0 மென்பொருள் கொண்டு மேலும் மெருகேற்றினேன். அது தமிழக அரசின்… தமிழ் இணையப் பல்கலைகழத்தின் வாயிலாக அச்சு (TAU-ACHU–UNICODE) என்ற பெயரில் யூனிக்கோடு முறைமையில் நம் எல்லோரும் பாவிக்கலாம்! இப்போது இலவச தரவிறக்கமும் செய்யலாம்… (http://www.tamilvu.org/en/Tamil-Keyboard-interfaces-fonts)  (அதற்கு திரு முத்து நெடுமாறன், திரு. உதயசந்திரன் சார், கே.நாகராஜன் மற்றும் திருமதி தனலெட்சுமி கிரி & டீம்க்கு மீண்டும் மீண்டும் ஒரு நன்றி சொல்லி மகிழலாம்.)  


1968... DTP இல்லாத ஹேண்ட் கம்போஸிங்  காலகட்டத்தில் 
        ற
             ங்
                    கி
                         னா
                                  ன்

என கம்ப்யூட்டர் வசதி எட்டிப்பார்க்காத 60 களின் அச்சுக்கோர்ப்பு சிரமமும் நுணுக்கமும் சென்றறிந்து கதைக்குள் டைப்போகிராபி புதுமை. வெச்சு கிறங்க வெச்சார்! அந்த வரிகள் மேல் குழந்தைகள் போலும் மீண்டும் மீண்டும் ஏறி சறுக்கின நம் கண்கள்!


இந்தக் கதைக்குள் ' ஜி ஸ்டிரிங் அதிர்ந்தது என்னும் ஒற்றை வரியும்…மேஸ்ட்ரோ ராஜா சார் (ஜெ…வரைந்த கரையெல்லாம் செண்பகப்பூ) – கல்யாணராமனும் கிரியாஊக்கிகளாய் என்னைத் தூண்டி… கிட்டார் கற்றுக்கொள்ள செய்த அதிசயம் 80 களில் நடந்தேறியது! 

வாத்யார் சுஜாதா மறைந்து 12 வருடங்கள் கடந்தும் அவரது தாக்கம்…இன்றும் வாட்சப், பேஸ்புக், ஐபோன், ஆண்ட்ராய்டு என செல்போன் உலகிலும் ’செல்’லுபடியாகிறது.  அவர் இருந்திருந்தால் …ஏன் எதற்கு எப்படி? கன்னித்தீவாக வற்றாமல் வந்திருக்கும். ஒருவேளை இந்த வேலையிழப்புக்கான ’வேளை’ வந்திருக்காதோன்னு நெனைக்கேன்! இப்போதைய கூகுளாண்டவர் காலத்துத் தேடலிலும் கூட அவருடைய சென்ஸ் ஆஃப் ஹியூமர் கலந்து பதிலளிக்க ’E’ லோகத்தில் யாருமில்லா!


இன்றும் நைலான் கயிறுன்னு கூகிள் செய்ததில்… விசா பதிப்பகத்திற்காக நான் செய்த கவர் டிசைன் - கிழக்கு பதிப்பக வெளியீட்டுக்கு அட்டை என்று விக்கிபீடியாவில்... (ரொம்ம்ம்ம்ப வருஷமா கெடக்கு)...அதில் வியாபாரத் தவறு இருந்தாலும் அதற்காக கிழக்குப் பதிப்பகத்துக்கும் ஒரு நன்றி சொல்லி...
காலத்துக்கும் ஜெயித்தது நிற்கும் சுஜாதா சார் கதையுடன் என் அட்டை ஓவியம் கண்டு  எனக்கு மட்டும் உள்ளூர ஒரு கள்ள சொகம்… அதுக்கு வார்த்தை கிடையாது.! ஏனெனில் சமீபத்தில் கிழக்குப் பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த ஓலைப்பட்டாசு, நைலான் கயிறு … அட்டைகளை நல்லவேளை சுஜாதா சார் பார்க்கவில்லை! 


தொடர்வேன்


Post a Comment

புதியது பழையவை

Sports News