இலவச ஆலோசனை அரங்கம்-5

www.nellaikavinesan.com வழங்கும்
இலவச ஆலோசனை அரங்கம்-5


10ம்வகுப்பு படிக்கும் 
மாணவ ,மாணவிகளுக்கு
 ஓர் அருமையான வாய்ப்பு   பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.
  உங்களுக்கு விளக்கம் சொல்வதற்கு தயாராக இருக்கிறார், அனுபவமிக்க  அறிவியல் ஆசிரியர் திரு .என். தவமணி M.A.,B.Ed,C.G.T.
 பல ஆண்டுகள் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் சிறப்பு பயிற்சி வழங்கிய திருமிகு.என். தவமணி M.A.,B.Ed,C.G.T. அவர்கள் ,உங்கள் கேள்விகளுக்கு உடனே பதில் வழங்க காத்திருக்கிறார்.
 நெல்லைகவிநேசன் டாட். காம் (www.nellaikavinesan.com) இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது.
 ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தேவையான விளக்கங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.

அலைபேசி எண்:  .8248591887
தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்:

12.5.2020  -  செவ்வாய்க்கிழமை  -காலை 10 மணி முதல் 11 மணி வரை
                     (அறிவியல் தேர்வு ஆர்வமூட்டல் -பொதுத்தேர்வு குறிப்புகள்)  
13.5.2020  -  புதன்கிழமை              - மாலை 5 மணி முதல் 6 மணி வரை
                     (இயற்பியல் பாட முக்கிய குறிப்புகள்)
14.5.2020  -   வியாழக்கிழமை      -காலை 10 மணி முதல் 11 மணி வரை
                       (வேதியியல் பாட குறிப்புகள்)
15.5.2020  -   வெள்ளிக்கிழமை      - மாலை 5 மணி முதல் 6 மணி வரை
                       (உயிரியல் பாட குறிப்புகள்)அறிவியல் ஆசிரியர்
 திரு .என். தவமணி M.A.,B.Ed,C.G.T.

 மதுரை மாவட்டம் ,கொட்டாம்பட்டி ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 13 ஆண்டுகளாக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர். 
ஆல் இந்திய ரேடியோவில் 25 ஆண்டுகளாக நாட்டுப்புறப் பாடல்களை வழங்கிவருகிறார். 
பொதிகை தொலைக்காட்சியில்" இசை அறிவியல் "என்ற தலைப்பில் அறிவியல் பாடங்களை இசையின் மூலம் வழங்கி வந்துள்ளார். 
இவருடைய கற்பித்தல் திறனை பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் பாராட்டி இருக்கிறார்கள். 
முன்னாள் இணை இயக்குனர் திருமதி. செல்ம், விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் .திரு ஆஞ்சலோ இருதயசாமி மற்றும் திருமதி. பார்வதி உட்பட பல அதிகாரிகள் பாராட்டி இருக்கிறார்கள்
 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் ஆண்டுதோறும் 100 சதவீத தேர்ச்சியை பெறுவதுடன் சுமார் 12க்கும் அதிகமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற வைத்துள்ளார். இவருடைய கற்பித்தல் திறனை தினத்தந்தி, தி இந்து,தினமலர், இந்தியன் எக்ஸ்பிரஸ், புதிய தலைமுறை கல்வி வார இதழ், தந்தி டிவி ஆகியன பாராட்டியுள்ளன
 இசையின் மூலம் கடினமான அறிவியல் பாடங்களை கற்பிப்பது இவரது தனிச்சிறப்பு. அதுமட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் டெங்கு ,கரோனா வைரஸ் போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வுகளையும்  தனக்கே உரிய நாட்டுப்புற இசையில் சொல்வது கூடுதல் சிறப்பு. 

Post a Comment

புதியது பழையவை

Sports News