'அய்யராத்து பெண்ணும் அம்பேத்கரும்--திரைப்படம்

 

'அய்யராத்து பெண்ணும் அம்பேத்கரும்'
"இளந்தளிர் இயக்கம் "திரை கூடத்தின் முதல் தயாரிப்பான 'அய்யராத்து பெண்ணும் அம்பேத்கரும்'என்னும் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் ஆதித்தனார் கல்லூரி முன்னாள்  மாணவர் மற்றும்  தொழில் வழிகாட்டி பத்திரிக்கை  நிறுவனர், எடிட்டர் திரு .சம்பத் அவர்கள் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்கள்.. 


திரைப்பட நடிகர்கள் இமான் அண்ணாச்சி முத்துக்காளை நடிகை அஸ்மிதா மற்றும் இயக்குனர் அதன் ராஜ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.. 

இத்திரைப்படத்தின் இயக்குனர் அதன் ராஜ்- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் மாணவர் .1994 முதல் 97 வரை பிஏ பொருளாதாரம் பயின்றவர்..

1998 ஆம் ஆண்டு முதல் சுமார் 22 வருடம் திரை உலகில் நடிகராக குறும்பட இயக்குனராக பயணம் செய்பவர்.. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் நடிகராக இயக்குனராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.. 

படத்தின் தலைப்பை பார்த்து வியந்து பாராட்டி கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல்கள் எழுத ஸ்ரீகாந் தேவா அவர்கள் இசையமைக்கிறார்..

இப்படத்தின் இரண்டாம் படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களான சமுத்திரக்கனி நாசர் வழக்கு எண் முத்துராமன் எம்.எஸ் .பாஸ்கர் மைம் கோபி  மற்றும் முன்னணி திரைப்பட நடிகையான ஓவியா மற்றும்  இனியா போன்றோரிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது ஆதித்தனார் கல்லூரியில் இன்னாள் முன்னாள் மாணவர்கள்.. பேராசிரியப் பெருமக்கள் மற்றும் நல் உள்ளம் கொண்ட நண்பர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசியை எதிர்பார்த்து எம் படக்குழு காத்திருக்கிறது..


அனைவருக்கும் நன்றி.  


இயக்குனர் 

அதன் ராஜ்


 


1 கருத்துகள்

  1. வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர , நல்ல சமுதாயம் உருவாக நல்ல திரைப்படங்கள் எடுக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News