திருச்சியில் தினமும் 1000 பேருக்கு அன்னதானம்

 திருச்சியில் 

தினமும் 1000 பேருக்கு 

அன்னதானம்.


 


 தினமும் ஒரு குழு வேனில் வந்து பாத்திரங்களுடன் இறங்குவார்கள். அவர்கள் அங்குள்ள நோயாளிகள், மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்கி வருகின்றனர்.

 

இவர்கள் ஏதோ ஆண்டிற்கு ஒருமுறையோ அல்லது விசேஷ நாட்களிலோ இதைச் செய்வதில்லை. தினமும் இதை ஒரு சேவையாகவே செய்து வருகின்றனர். இந்த சேவை அகஸ்தியர் அன்னதானம் டிரஸ்ட் சார்பில் கோவிந்தராஜ் ரவிந்திரகுமார் என்பவரால் வழங்கப்படுகிறது.

 

சுமார் 31 ஆண்டுகளாக இவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனை வாசலில் காலை 7-8 காலை உணவு, மதியம் 12-1 மதிய உணவு, மாலை 7-8 இரவு உணவுகளை வழங்கி வருகின்றனர். இதற்காக அவர்கள் ஒரு பைசாகூட யாரிடமும் வாங்குவதில்லை.

 

இது கோவிந்தராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உதவி செய்ய எண்ணினார். ஆனால் அன்று அவரிடம் இருந்த பணத்தை வைத்து அவரால் வெறும் வெந்நீர் மட்டும் தான் வழங்க முடிந்தது. நாளடைவில் அவர் கஞ்சியைத் தினமும் வழங்கும் அளவிற்கு வளர்ந்தார். இன்று அவர் தினமும் 3 வேலை சாப்பாடு தானமாக வழங்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார். 29 ஆண்டுகள் இடைவிடாது இந்த பணியை அவர் செய்து வருகிறார்.

 

இவர் தினமும் 1000+  பேருக்கு உணவுகளைத் தயார் செய்து வழங்கி றார். இதற்காக அவர் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து உணவு தயார் செய்யத் துவங்கி விடுகிறார். இவர் உணவை வெளியே கொண்டு சென்று வழங்கும்போது அவரின் மனைவி மதிய உணவு தயார் செய்யும் வேலையைப் பார்க்கிறார்.

 

இவர் காலை உணவிற்காக பொங்கல் மற்றும் கஞ்சி, மதிய உணவிற்காகச் சாதம், சாம்பார், ரசம், மற்றும் தயிர்ச் சாதம் ஆகியவற்றை அன்னதானமாக வழங்கி வருகிறார். இவருக்கு சில தன்னார்வலர்கள் வந்து உதவி செய்தும் வருகின்றனர்.

 

இவ்வாறு உணவுகளைத் தானமாக அதுவும் தன் தினப்பணிகளுக்கு இடையே ஒரு பணியாக எடுத்து செய்யும் குணமும், மனமும் எல்லோருக்கும் அமைந்துவிடவில்லை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலான இந்த அகஸ்தியர் அன்னதான டிரஸ்ட் குழுவினரைப் பலர் பாராட்டி வருகின்றனர். நீங்களும் கமெண்ட் செக்ஷனில் அவர்களைப் பாராட்டலாம்.


Contact details:


AGASTHIYAR ANNADHANAM


V.G.RAVINDRAKUMAR (TREASURER),

No.154, 7TH STREET, Ex.SERVICEMAN COLONY,

PONMALAI, 

TRICHY-620004. 

MOBILE : 9486916401 / 9443592675

EMAIL-ID : agasthiyarannadhanam@gmail.com1 கருத்துகள்

  1. பல ஆண்டுகளாக அண்ணதானம் செய்து வரும் திரு ரவீந்திரகுமார் அரங்கனின் பிரதிநிதி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News