"கலையாத கல்வியும் ..." --பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன்

 "கலையாத கல்வியும் ..."

--பின்னணி பாடகர் 

சீர்காழி கோவிந்தராஜன்


கலையாத கல்வியும் குறையாத வயதும்

கலையாத கல்வியும் குறையாத வயதும்

ஓர் கபடுவா ராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணி யகலாத உடலும்

சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத தொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில் லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே

ஆதிகட வூரின் வாழ்வே

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி அபிராமியே!


Post a Comment

புதியது பழையவை

Sports News