'தே' விருது வழங்கும் விழா -2021
NPNK நண்பர்கள் மன்றம் பெருமையுடன் வழங்கும் 3ம் ஆண்டு 'தே' விருது வழங்கும் விழா திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் இன்று 29/12/21 மாலை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் சாதனை படைத்த 10 பல்துறை ஆளுமைகளுக்கும் 6 பேருக்கு கவுரவ விருதுகளும் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. விஷ்ணு அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
மேலும் எழுத்தாளர் திரு. நாறும்பூநாதன் மற்றும் எழுத்தாளர் திரு. முத்தாலங்குறிச்சி காமராசு ,முனைவர்.கவிஞர். கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்கள் பேசும் போது... NPNK நண்பர்கள் மன்றம் வழங்கிய 3 ம் ஆண்டு விருது விழா கடந்த ஆண்டை விட சிறப்பான ஏற்பாடுகளுடன் தகுதியான நபர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது அத்துடன் இதற்காக வழங்கப்பட்ட விருதுகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகளை தனித்துவமாக உருவாக்கிய நெல்லை லெனின் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
விழாவில் விருது பெற்றவர்களுக்கு அகமகிழ் கலைக்கூடம் கலை இயக்குனர் நெல்லை லெனின் அவர்கள் கைகளால் தயாரித்த பிரேத்யேகமான விருதுகள் வழங்கப்பட்டன.இந்த விருதுகளை அவரோடு இணைந்து அவரின் மனைவி திருமதி.பிரியா லெனின் மற்றும் அவரது மகள் இலக்கியா மூவரும் சேர்ந்து குடும்பமாக பல நாள் இரவு பகல் பாராமல் உழைத்து கைகளாலேயே உருவாக்கியுள்ளனர்.
ஒவ்வொரு விருதுக்கும் ஒரு தீம்
கனவு ஆசிரியரின் முகமாய் வித்தியாச புத்தகத்தோடு புதிய சிந்தனையில் உருவான விருது ஒன்று. சிப்பிகளை வைத்து உருவாக்கப்பட்ட உறுதுணையாளர்களுக்கான நினைவுப் பரிசு இது பனை ஓலை சிப்பி மற்றும் சிறு கற்கள் என துரும்பையும் கலையாகியுள்ளார்.
குளம் பரமரிப்பு நீர் பராமரிப்பு செய்து வரும் லெப்பை அவர்களுக்கு பிர த்யேகமாக உருவாக்கப்பட்ட புடைப்பு சிற்பம் இதன் ஒவ்வொர்ரு இன்ச் இடத்திலும் ஒரு theme உள்ளது.ஒவ்வொரு விருதுக்கும் தனித்துவ சிந்தனை கடும் உழைப்பு மிகுந்த நேரம் செலவு செய்து தன் மனைவியோடு சேர்ந்து உருவாக்கி கொடுத்த நெல்லை லெனின் அவர்களின் உழைப்பை அனைவரும் வியந்து பாராட்டினார்கள்
விருதுகள் பெற்றவர்களின் பட்டியல்
இந்த விருது விழாவில் விருதுகள் பெற்றவர்களின் பட்டியல்
ஆச்சரிய அரசுத்துறை அதிகாரி விருது நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி. சிவ சத்தியவள்ளி அவர்களுக்கும்சிறந்த ஊடகவியலாளர் விருது திரு. முப்புடாதி அவர்களுக்கும்சிறந்த விளையாட்டு வீரர் விருது தேசிய வில்வித்தை வீரர் விருது திரு.முகம்மது பரூக் அவர்களுக்கும்சிறந்த சூழலியலாளர் விருது திரு.ரமேஷ்வரன் அவர்களுக்கும்சிறந்த சமூக சேவை நாயகன் விருது மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு.சரவணன் அவர்களுக்கும் சாதனை கலைஞன் விருது ஓவிய ஆசான் திரு. பத்தமடை கணேசன்அவர்களுக்கும்
சிறந்த அறிவியல் சிந்தனையாளர் விருது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் திரு. சுதாகர் அவர்களுக்கும்நம்பிக்கை நாயகன் விருது வரலாற்று ஆர்வலர் மற்றும் ஆசிரியர் திரு.சிவகளை மாணிக்கம் அவர்களுக்கும்இளம் சாதனையாளர் விருது செல்வி.திவ்யபாரதி அரோரா சமூக அறக்கட்டளையின் செல்வி திவ்யபாரதி அவர்களுக்கும்சமூக நல் மாற்றத்திற்கான குழு விருது நெல்லை அனிமல் சேவர்ஸ் குழுவினர்க்கும்சிறந்த சூழலியல் நண்பன் விருது கா.பக்கீர் முகம்மது லெப்பை அவர்களுக்கும் சிறந்த தன்னார்வலர் மற்றும் சிறந்த தன்னார்வல குழு ஒருங்கிணைப்பாளர் விருதுதிரு.N. M. மிதார் முகைதீன் ஒருங்கிணைப்பாளர் FOP - மக்களின் நண்பர்கள் அமைப்பு நண்பர்களுக்கும். தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பி.இளங்கோவன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
கனவு ஆசிரியர் விருது தூத்துக்குடி மாவட்ட நாசரேத் பண்டாரம்பட்டி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு NPNK உறுப்பினர்கள் சென்னை அனுராதா ரமேஷ், நெல்லை, அபி கோல்டு அபி முருகன், ஆயூஷ்மான் ஹெர்பல்ஸ் ஷேக் சாலி, அலிஃப் மொபைல்ஸ் அப்துல் ரகுமான், நெல்லை குருசாமி, மதன் மோகன், தெய்வநாயகபேரி கடற்கரை என்கிற தாஸ், புகைப்பட கலைஞர் நாயகம் கண்ணன் , தாமிரா டிவி திரு முருகன், வேதிகா, உமா, ரகசியா,ஆகியோர் உறுதுணையாக இருந்து விழா நடக்க சிறப்பாக உதவினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை NPNK நல்லதைப் பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்றம் ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சுரேஷ், சிவ நட்ராஜ், நேரு யுவ கேந்திரா சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
----------------------------------------
கருத்துரையிடுக