பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர்

 

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நிறுவனர் தலைவர்

 ஹாஜி. மு.ந.முஹம்மது சாகிப்
 நூலகக் கட்டடத் திறப்பு விழா.


பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் அதிநவீனமாகக் கட்டப்பட்டுள்ள “நிறுவனர் தலைவர் ஹாஜி மு.ந.முஹம்மது சாகிப்”  நூலகக் கட்டடத் திறப்புவிழா 15.12.2021 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் மு.முஹம்மது சாதிக் வரவேற்றுப் பேசினார்.  மாண்புமிகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் நூலகத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த. இ. செ. பத்ஹூர் ரப்பானி அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் ஹாஜி. வாவு .எஸ்.செய்யது அப்துர் ரகுமான், ஆட்சிக்குழுப் பொருளாளர் ஹாஜி ஹெச்.எம். ஷேக் அப்துல்காதர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஹாஜி எம் கேம் எம். முகம்மது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முகம்மது நவாப் ஹுசைன், ஜனாப் பி.எஸ்.எம்.இல்யாஸ், பேரா.எஸ்.அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் நகர் மன்றத் தலைவர் சுப சீத்தாராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  லட்சுமணன், எல்.கே.எஸ் மீரான் மைதீன், திரு. மில்லத் இஸ்மாயில்,  ஏ.எல்.எஸ் லெட்சுமணன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னிலை வகித்தார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கா.பிச்சுமணி தன்னாட்சி நிலையில் செயல்படும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தனது சொந்த செலவில் 3கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12000 சதுர அடியில் நூலகம் கட்டியிருப்பது பாராட்டுதலுக்கும்  போற்றுதலுக்கும் உரியது என்று வாழ்த்தினார்.  இந்நூலகம் ஆடியோ மற்றும் வீடியோ வசதியுடன் விசுவல் நூலகமாகத் திகழ வேண்டும் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார். பாளையங்கோட்டையில் டிஜிட்டல் நூலகமாக  நிறுவனர் தலைவர் ஹாஜி மு.ந.முஹம்மது சாகிப் நூலகம் திகழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் வாழ்த்துரை வழங்கினார். நான் சட்டமன்ற உறுப்பினரானதற்கு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நான் பெற்ற பட்டமும் கல்வியும்தான் காரணம் என்பதைப் பெருமையுடன் கூறினார். முன்னாள் மாணவரான என்னுடைய முன்னிலையில் கல்லூரியின் நூலகம் திறக்கப்பட்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டார்.

 மாண்புமிகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடைய உரையில் நூலகம் உயர்கல்விக்கு அடிப்படையாகத் திகழ்கின்றது. நூலகத்தின் வாயிலாக ஆராய்ச்சிகள் பெருக வேண்டும். ஆராய்ச்சி மாணவர்களுக்காகச் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பதைப்போல, மதுரையில் தமிழக முதல்வர் அவர்கள் கலைஞர் நூலகத்தை உருவாக்குகிறார்கள். அந்த முயற்சியின் அங்கமாக நீங்கள் உருவாக்கி இருக்கும் நிறுவனர் தலைவர் ஹாஜி மு.ந.முஹம்மது சாகிப் நூலகமும் அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இஸ்லாமிய மக்களுக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக பல சமூகச் சேவைகளைச் செய்தவரும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உருவாவதற்கு மூலகாரணமாக இருந்தவருமான நிறுவனர் தலைவர் ஹாஜி மு.ந.முஹம்மது சாகிப் அவர்களை வாழ்த்தி அவர் பெயரால் உருவான இந்நூலகக் கட்டடத்தைத் திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன்.   இந்த நூலகத்தை ஆசிரியப் பெருமக்கள் அதிக அளவில் பயன்படுத்தவேண்டும். ஆசிரியப் பணியின் தொடக்கம் தான் பேராசிரியர்களுக்கு வாசிப்பையும் ஆராய்ச்சி முனைப்பையும் அதிகப்படுத்துகிறது. மாணவ மாணவியர்கள் அதிக அளவில் நூலகத்தைப் பயன்படுத்தி அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுப் பணிபுரிய வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை அளித்திருக்கிறார்கள். இந்நூலகத்தின் வாயிலாக அனைத்துச் சமுதாய மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது காஜா நன்றியுரை கூறினார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவச்செல்வங்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.


Post a Comment

புதியது பழையவை

Sports News