பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பி பாலசுப்பிரமணியம்.

 
பத்மஸ்ரீ விருது பெற்ற
 சிற்பி பாலசுப்பிரமணியம்.

பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பி பாலசுப்பிரமணியம் கோவை மாவட்டம் ஆத்துப் பொள்ளாச்சியை சேர்ந்தவர். கவிஞர், மொழி பெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர். ... கவிஞர், மொழி பெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர்




இயற்பெயர் = நடராச பாலசுப்ரமணிய சேது ராமசாமி

ஊர் = பொள்ளாச்சி

பெற்றோர் = பொன்னுசாமி கவுண்டர், கண்டியம்மாள்

இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்

சிற்பி பாலசுப்ரமணியம் கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்

 “ஒரு கிராமத்து நதி” என்னும் நூலுக்குச் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்றார்.

தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல்பரிசு பெற்றுள்ளார்.

கவிஞர்கோ எனும் பட்டம் குன்றக்குடி அடிகளார் அவர்களால் வழங்கப்பட்டது 

இரு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர்

சிற்பி பாலசுப்ரமணியம்

ஒன்று “ஒரு கிராமத்து நதி” (2003) என்ற கவிதை நூலிற்காகவும், மொழிபெயர்ப்புக்காக (2001) ஒரு முறை என இரு முறை விருதினை பெற்றுள்ளார்

சிற்பி பாலசுப்ரமணியம் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார்

தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர் விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர்

இவர் வானம்பாடிக் கவிஞர் ஆவார்

நடப்பியல்பை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர்

சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் முதல் கவிதை = ஆழ்கடலே கேள்

சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் முதல் கவிதை தொகுதி = நிலவுப்பூ

சிறப்பு பெயர்

சிற்பி (எழுத்துக்களைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்)

“வானம்பாடி” கவிதை அமைப்பின் தந்தை

கவிதை நூல்கள்

  • சிரித்த முத்துக்கள்
  • ஆழ்கடலே கேள் (முதல் கவிதை)
  • நிலவுப்பூ (முதல் கவிதை தொகுதி)
  • ஒளிப்பறவை
  • சூரிய நிழல்
  • ஆதிரை(கவிதை நாடகம்)
  • சர்ப்பயாகம்
  • புன்னகை பூக்கும் பூனைகள்
  • மௌனமயக்கங்கள்(தமிழக அரசு பரிசு)
  • இறகு
  • ஒரு கிராமத்து நதி(சாகித்ய அகாடமி விருது)
  • ரோஷம்
  • அத்திமரம்
  • மாப்பிள்ளை கவுண்டர்
  • பெல்ஜியம் கண்ணாடி
  • ஓடு ஓடு சங்கிலி
  • பாடம் சொன்னவர்கள்
  • எல்லாம் விளையாட்டு
  • ஊமையன்
  • அம்மன் பண்டிகை
  • அரங்கேற்றம்
  • ஓ சகுந்தலா
  • சிற்பியின் கவிதை வானம் (திருப்பூர் தமிழ்சங்க விருது)
  • பூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு விருது)
  • பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு
  • பாரதி : கைதி எண் : 253 (20.11.1918 முதல்  14.12.1918 முடிய 25 நாட்கள் பாரதியார் சிறைக்கூடத்தில் கைதை எண் 253 ஆக சிறையில் இருந்தார். பாரதி சிறையில் இருந்த காலத்தில் வாழ்க்கை நிகழ்வுகளைப் பாரதி சிந்திப்பது போல் அமைத்த கவிதையே இது)
  • மூடுபனி
  • சிற்பி : கவிதை பயணங்கள்
  • தேவயாணி
  • மகாத்மா
  • நீலக்குருவி
  • கவிதை வானம்

கவிதை நாடகம்

ஆதிரை

சிறுவர் நூல்கள்

  • சிற்பி தரும் ஆத்திச்சூடி
  • வண்ணப்பூக்கள்

உரைநடை நூல்கள்

  • இலக்கியச் சிந்தனை
  • மலையாளக் கவிதை
  • அலையும் சுவடும்
  • ஒரு கிராமத்து நதி
  • வண்ணப் பூக்கள்
  • இல்லறமே நல்லறம்
  • மின்னல் கீற்று
  • சிற்பியின் கட்டுரைகள்
  • படைப்பும் பார்வையும்
  • கவிதை நேரங்கள்
  • மகாகவி
  • நேற்றுப் பெய்த மழை
  • காற்று வரைந்த ஒவியம
  • புதிர் எதிர் காலம்
  • மனம் புகும் சொற்கள்

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

  • இராமாநுசர் வரலாறு 
  • ம.ப.பெரியசாமித் தூரன்
  • பாரத ரத்னம் சி.சுப்பிரமணியம் 
  • ஆர்.சண்முகசுந்தரம் 
  • சே.ப. நரசிம்மலு நாயுடு
  • மகாகவி பாரதியார்
  • நம்மாழ்வார் 
  • தொண்டில் கனிந்த தூரன்

மொழிபெயர்ப்பு கவிதை நூல்

  • சச்சிதானந்தன் கவிதைகள்
  • உஜ்ஜயினி
  • கவிதை மீண்டும் வரும்
  • காலத்தை உறங்க விடமாட்டேன்
  • கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

மொழிபெயர்ப்பு புதினங்கள்

  • அக்கினி சாட்சி (சாகித்திய அகாதெமி விருது பெற்றது) (லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்ற நூலை மொழிப்பெயர்த்தார்)
  • ஒரு சங்கீதம் போல
  • வாரணாசி

பிற மொழிபெயர்ப்பு நூல்கள்

  • தேனீக்களும் மக்களும்
  • சாதனைகள் எப்போதும் சாத்தியந்தான்
  • வெள்ளிப்பனி மலையின் மீது

இலக்கிய வரலாறு நூல்

தமிழ் இலக்கிய வரலாறு – சிற்பி

ஆங்கில நூல்

A Comparative Study of Bharati and Vallathol

தொகுப்பு நூல்

நதிக்கரைச் சிற்பங்கள்

அறக்கட்டளை பொழிவு நூல்கள்

  • கம்பனில் மானுடம்
  • இருபதாம் நூற்றாண்டுத் தமிழக் கவிதை
  • பாரதிதாசனுக்குள் பாரதி

சிற்பி பாலசுப்ரமணியம் – விருதுகள்

  • மௌன மயக்கங்கள் – கவிதை நூல் – தமிழக அரசு விருது (1982)
  • பாவேந்தர் விருது – தமிழக அரசு (1991)
  • கபிலர் விருது – கவிஞர் கோ பட்டம் – குன்றக்குடி அடிகளா ர் (1992)
  • A Comparative study of Bharati and Vallathol
  • உ. சுப்பிரமணியனார் ஆங்கில நூல் பரிசு – தமிழ்ப் பல்கலைக்கழகம் (1994)
  • இந்துஸ்தான் லீவர் Know your India போட்டி முதல் பரிசு (1970)
  • பாஸ்கர சேதுபதி விருது – முருகாலயா – சென்னை (1995)
  • தமிழ் நெறிச் செம்மல் விருது – நன்னெறிக் கழகம் கோவை (1996)
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது – சிற்பியின் கவிதை வானம் நூலுக்கு – (1997)
  • கம்பன் கலை மணி விருது – கம்பன் அறநிலை , கோவை (1998)
  • சொல்கட்டுக் கவிஞர் விருது – திருவாரூர் இயல் தமிழ் பதிப்பகம் (1990)
  • தமிழ்ப் புலமைக்கான சென்னை கொங்கு நண்பர்கள் சங்க விருது (1997)
  • மூத்த எழுத்தாளருக்கான லில்லிதேவசிகாமணி விருது (1998)
  • ராணா விருது – ஈரோடு இலக்கியப் பேரவை (1998)
  • சிறந்த தமிழ்க் கவிஞர் விருது – கேரள பண்பாட்டு மையம் (1998)
  • இருபதாம் நூற்றாண்டில் சிறந்த எழுத்தாளர் விருது – DIYA (1998)
  • பாரதி இலக்கிய மாமணி விருது – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சென்னை 
  • ‘பூஜ்யங்களி ன் சங்கிலி’ – தமிழ்நா டு அரசு பரி சு (1998)
  • ‘The Pride of Pollachi’ விருது – பொள்ளாச்சி காஸ்மோ பாலிடன் கிளப் (1999)
  • ராஜாசர் அண்ணாமலைச்செட்டியார் பிறந்த நாள் பரிசு -மதுரைத் தமிழிசைச் சங்கம் (2000)
  • சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது – 2000 (அக்கினி சாட்சி நாவலுக்கு – 2001)
  • சாகித்ய அகாதமி படைப்பிலக்கிய விருது 2002 – (ஒருகிராமத்து நதி கவிதை நூலுக்கு – (2003))
  • பாரதி விருது – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (2002)
  • மகாகவி உள்ளூர் விருது – திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் (2003)
  • பணியில் மாண்பு விருது – ரோட்டரி சங்கம் (வடக்கு) கோவை (2003)
  • தலை சிறந்த பழைய மாணவர் விருது- ஜமால் முகமது கல்லூரி (2003)
  • பாரதிபாவாணர் விருது – மகாகவி பாரதி அறக்கட்டளை கோயம்புத்தூர் (2004)
  • பாராட்டு விருது – அரிமா மாவட்டம்  கோ யம்புத்தூர் (2004)
  • தமிழ் வாகைச் செம்மல் விருது – சே லம் தமிழ்ச் சங்கம் (2005)
  • ராஜா சர் முத்தையா விருது (2009)
  • கவிக்கோ அப்துல்ரகுமான் விருது (2006)
  • அரிமா சங்கம் பொள்ளாச்சி, பிரம்மகுரு விருது (2007)
  • வெற்றித் தமிழர் பேரவை விருது (2008)
  • தமிழ்நாடு அரசு கலை மாமணி விருது (2009)
  • ‘நல்லி’ திசை எட்டும் மொ ழியாக்க விருது (2010)
  • ச.மெய்யப்பன் அறக்கட்டளை – தமிழறிஞர் விருது (2010)
  • பாரதிய வித்யா பவன் கோவை , தமிழ்மா மணி விருது (2010)
  • கம்பன் கழகம் சென்னை எம்.எம்.இஸ்மா யில் விருது (2010)
  • பப்பாசி கலைஞர் பொற்கிழி விருது (2012)
நன்றி:https://tnpscwinners.com/


Post a Comment

புதியது பழையவை

Sports News