நல்ல எண்ணம் கொண்ட உயர்ந்த மனிதர்.. குவைத் Er. P. பலவேசமுத்து

 நல்ல எண்ணம் கொண்ட 
உயர்ந்த மனிதர்..
குவைத் Er.  P. பலவேசமுத்து.




இளங்கலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு
 தமிழ் பாடத்திற்கு
 இரண்டு தங்கப் பதக்கங்கள்

எனது B.Sc வகுப்புத் தோழன் Er.  P. பலவேசமுத்து குவைத் மற்றும் இந்தியாவில் ஒரு வெற்றிகரமான வர்த்தகர்.  1990ஆம் ஆண்டு திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கல்லூரியில் நாங்கள் B.Sc வேதியியல் படிப்பை முடித்தோம். பின் P. பலவேசமுத்து தொடர்ந்து சென்னை MITயில் பிடெக் Instrumentation முடித்தார். 

  நான் அவரிடம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்  படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு  தங்கப் பதக்க நன்கொடை (Gold medal Endorsement)  கேட்டேன்.  அவர் எனது விருப்பத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டார். இன்று பல்கலைக் கழகத்திற்கு  2 லட்சம் ரூபாய் செலுத்தி 
இரண்டு தங்கப் பதக்கங்களுக்கு  ஏற்பாடு செய்தார்:

1. B.Sc/B.Com/BA படிக்கும் மாணவர்களில் தமிழில் (Part III - Tamil) முதலிடம் பிடிக்கும் மாணவ/மாணவிகளுக்கு  ஒரு தங்கப் பதக்கமும் மற்றும்

2. BA தமிழ் படிக்கும் மாணவர்களில் தமிழில் (Part I – Tamil) முதலிடம் பிடிக்கும் மாணவ/மாணவிகளுக்கு  ஒரு தங்கப் பதக்கமும்  கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த பதக்கம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அவரின் மாமனார் தாமரைப்பாண்டி [முன்னாள் செயலாளர், தூத்துக்குடி துறைமுகம்] நினைவு தங்கப்பதக்கம் என  வழங்கப்படவுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன் இவர் என் வேண்டுகோளுக்கு இணங்க

 1. பல்கலைக்கழகத் துறையின் MSc பயோடெக்னாலஜி மாணவர்களின் முதலிடம் பெற்றவர்களுக்குத் தங்கப் பதக்கமும்

 2. எங்கள் பல்கலைக்கழகத்தின் இணைந்த கல்லூரிகளின் MSc பயோடெக்னாலஜி மாணவர்களில் முதலிடம் பெற்றவர்களுக்குத் தங்கப் பதக்கத்திற்கும்   ஏற்பாட்டை இரண்டு லட்சம் ரூபாய் செலவில் தொடங்கிவைத்தார்.

இவரின் தந்தை மற்றும் சகோதரி பெயரில் மூன்று வருடங்களாக  வழங்கப்பட்டு வருகிறது.

 கற்றதும் பெற்றதும்  சமுதாயத்திற்குப் பயன் பட  வேண்டும்.  கோயில் உண்டியலில் கொண்டு போய் போடுவதற்குக்  கல்வி நிலையங்களுக்குச் செய்யலாம். கொடுப்பதற்கு ஒரு உயர்ந்த உள்ளம் வேண்டும். எதிர்கால சந்ததியினர் வளம் பெறுவார்கள்.

பேராசிரியர் டாக்டர். சுதாகர்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 
திருநெல்வேலி.

நன்றி: ஃபேஸ்புக்(FACE BOOK)

Post a Comment

புதியது பழையவை

Sports News