நெல்லை கவிநேசன் பெற்ற "செந்தமிழ் வளர் செம்மல் விருது"

 நெல்லை கவிநேசன் 
பெற்ற

"செந்தமிழ் வளர் செம்மல் விருது"

துணைவேந்தர் வழங்கினார்.


 பாரதியார் உலக பொதுச்சேவை நிதியத்தின் சார்பில் உலக தாய்மொழி தின விழா திருநெல்வேலி நகரம் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

 விழாவிற்கு பாரதியார் உலக பொது சேவை நிதிய தலைவர் கல்விச் செம்மல்.அமரியசூசை தலைமை தாங்கினார். தமிழ் வாழ்த்துப் பாடலை கி.சந்திரபாபு பாடினார்.

 துணைப் பொதுச்செயலாளர் கவிஞர்.சு முத்துசாமி வரவேற்புரையாற்றினார். 

    பாரதியார் உலக பொது சேவை நிதிய பொருளாளர் கவிஞர் பாப்பாக்குடி.இரா. செல்வமணி முன்னிலை உரையாற்றினார். 

    தொடர்ந்து பாரதியார் உலக பொது சேவை நிதிய பொதுச் செயலாளர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன் தொடக்க உரையாற்றினார். 

    இலக்கிய ஆளுமைகளுக்கு விருது வழங்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் க. பிச்சுமணி சிறப்புரையாற்றினார். 



    செந்தமிழ் வளர் செம்மல் விருது முனைவர் பால் வளன்அரசு கவிஞர் புத்தநேரி கோ. செல்லப்பா, புலவர் வீ செந்தில் நாயகம், கவிஞர் விரை முத்தையா, எழுத்தாளர் அம்பை பாலசரஸ்வதி, எழுத்தாளர் நெல்லை கவிநேசன், நெல்லை. மு.அ.நசிர் பெரும்புலவர் இளங்கோ, நாவலர் பாரதிகண்ணன், முனைவர் சந்திர புஷ்பம் பிரபு, கவிஞர்.மூக்குப்பேரி தேவதாசன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 விழாவில் புலவர் ராமசாமி பேராசிரியர் ஹரிஹரன், கவிஞர்கள்.ஜெயபாலன்,வேதிகா, உமா, முத்துவேல், செல்வராணி, முனைவர் சரவணகுமார், கவிஞர் சக்தி வேலாயுதம், செ.ச.பிரபு, கோமதி கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்து பேசினார், 

    நிறைவாக முனைவர். முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார். 

எழுத்தாளர் மு.வெ.ரா. விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

                                                                ------------------------------------


2 கருத்துகள்

  1. செந்தமிழ் வள்ளல் செம்மல் விருதினைப் பெற்ற பேராசிரியர். கவிஞர். நெல்லைகவினேசன் அவர்களுக்கு எனது மனம் கனிந்த பாராட்டுக்கள்! மேலும் ஆளுமை விருதுகள் பெற்ற புத்தநெறி செல்லப்பா ,முனைவர் சந்திரா புஷ்பம் உள்ளிட்ட அனைவருக்கும், எனது இனிய பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பும் பாசமும் மிக்க குரு அவர்களுக்கு,
      தங்களின் இனிய ஆசிகளுக்கு இதய நன்றிகள்.
      மிக்க அன்புடன்
      நெல்லை கவிநேசன்

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News