மலை கிராமங்களில் திகில் பயணம்

 மலை கிராமங்களில்...
 திகில் பயணம்

கோயமுத்தூரில் உள்ள கோவைபுதூர் அருகே உள்ளது பச்சாபள்ளி, ஓடைப் புறம்போக்கு பகுதியில் அமைந்துள்ள ஓட்டுக்கூரை வீடுகளில் ஒன்றில் நள்ளிரவு காட்டுயானை ஒன்று கூடையில் இருந்த தக்காளியை ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. 
எப்படி?

 ஓட்டுக்கூரையை உடைத்து, அதற்குள் தும்பிக்கையை விட்டு, ஜன்னல் அருகில் இருந்த வாயில் தக்காளியை எடுத்து எடுத்து போட்டுக் கொண்டிருந்தது. 

அதைப் பார்த்து அரண்ட கணவன், மனைவி இருவரும் வெளியே வந்து ‘யானே.. யானே ஓடி வாங்க!’ எனக் கத்தினதும் மனைவி வாயைப் பொத்தினான் கணவன்.

 என்ன ஆச்சு... அந்த வீட்டின் முன்பும் மலைக்குன்றுகள் போல் இரண்டு காட்டு யானைகள் கரிய இருளில் நின்று கொண்டிருந்ததுதான்.. அப்புறம் என்ன ஆச்சு? இந்த நிஜக் கதையைக் கேளுங்கள்..

யானை வருதேய்ய்..." -1





யானை வருதேய்ய்.... 2.

மொத்தம் 27 காட்டு யானைகள். அதில் 2 குட்டி யானைகள். பிறந்து 25, 35 நாட்களேயான குட்டிகள்... தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குட்டிகளை காப்பாற்ற யானைகள் முயற்சித்தன.

 அவற்றுக்கு மனிதர்கள் உதவி செய்தனர். கிட்டத்தட்ட 9 மணி நேர போராட்டம். குட்டிகள் வெளியே வந்து விட்டன. தாய் யானை அவற்றை கூட்டிச்சென்றது. 

அதன் பின்னாலேயே புகைப்படம் எடுத்துக் கொண்டே சென்றேன். இதோ தாய் யானை திரும்பி விட்டது. என்னை நோக்கி வருகிறது. நான் திரும்பி ஓடுகிறேன். குன்றுகள், மலைகள். 

விழுகிறேன். 

அந்த காட்டு யானையின் காலடியில் கண்களில் உயிர்பயம் மின்ன கிடக்கிறேன். பிறகு என்ன நடந்தது?




நன்றி:  கா.சு வேலாயுதன்,,
KADHAI vattum கதைவட்டம்

Post a Comment

புதியது பழையவை