சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசத் தலைவர்களுக்காக சிறப்பு அரங்கு .

 

சென்னை புத்தகக் கண்காட்சியில் 

தேசத் தலைவர்களுக்காக

  சிறப்பு அரங்கு .




சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் தேசத் தலைவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அரங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது

கண்காட்சியில் 3-வது நுழைவு வாயிலில் அரங்கம் எண் 191 மற்றும் 192-ல் இந்த சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு, மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு, கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது ஆண்டு பிறந்த நாள் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை கருப்பொருளாகக் கொண்டு இந்த சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

கண்காட்சியில் 800 அரங்குகள் உள்ளன. குறிப்பாக 191 மற்றும் 192-வது அரங்கு சிறப்பு அரங்காக அமைக்கப்பட்டுள்ளது பள்ளி, கல்லூரி மாணவர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. காந்தி, நேதாஜி, திலகர், வல்லபபாய் படேல், அம்பேத்கர், நேரு மற்றும் இந்திய சுந்திரப் போரில் ஈடுபட்டு தியாகிகள் குறித்த நூல்கள் அனைத்தும் திரட்டப்பட்டு ஒரே அரங்கில் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


 இதுதவிர வீர சிவாஜி, கட்டபொம்மன், ஜான்சிராணி, மருது சகோதரர்கள் என சரித்திர கதைகள், நாவல்கள், ஆய்வாளர்கள் எழுதிய இந்திய வரலாற்று நூல்கள்,  100 ஆண்டுகளில் பாரதியார் குறித்து வெளிவந்துள்ள பல்வேறு பதிப்பாளர்களின் வெளியீடுகள், வ.உ.சி. எழுதிய நூல்கள், புரட்சியாளர்கள், காந்தியின் சுயசரிதை என எண்ணற்ற நூல்கள் திரட்டப்பட்டு கண்காட்சியில் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக மகாகவி பாரதியாரின் ஆளுயர கட்அவுட் ஒன்று இந்த அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் வரிசையில் நின்று சுயபடம் (செல்பி) எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். 

குறிப்பாக குடும்பத்துடன் நின்று படம் எடுத்து மகிழும் வகையில் இந்த கட்-அவுட் அமைக்கப்பட்டு வாசகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அரங்கிற்கு வரும் சிறார்களுக்கு தேசியக் கொடி அணிவிக்கப்பட்டு விடுதலை நாள் எழுச்சி ஊட்டப்பட்டு வருகிறது. 

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சி, இன்னும் 5 தினங்களே உள்ளதால் வாசகர்கள் குவிந்து வருகின்றனர். தேசத் தலைவர்களுக்கான 

இந்த சிறப்பு அரங்கிற்கு வருவோர் 3-வது நுழைவுவாயிலில் நுழைந்தால் அரங்கம் எண் 191-ஐ எளிதில் அடையலாம். இதுதொடர்பான விவரம் வேண்டுவோர் 6374 700 858, 99404 81276 ஆகிய கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.


                                                -------------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News