தூய சவேரியார் கல்லூரி--சமூக விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

 

தூய சவேரியார் கல்லூரி-
சமூக விழிப்புணர்வு 
மற்றும்
 தன்னம்பிக்கை  நிகழ்ச்சி 


இளந்தளிர் இயக்கத்தின் சார்பாக திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் மாணவ மாணவியருக்கான சமூக விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 இதில் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் அதன் ராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு தன்னம்பிக்கை தைரியம் மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.
கல்லூரி பேராசிரியர் டாக்டர் அலாய்சியஸ் ஆல்பர்ட் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார், மாணவியர் பிரதிநிதி சுதா வரவேற்புரை ஆற்றினார்.

பேராசிரியர் சோபியா சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார், விழா ஏற்பாடுகளை மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பேராசிரியர் கந்தன் சிறப்பாக செய்திருந்தனர். 
பங்கு பெற்ற மாணவ மாணவியர் அனைவரும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது எனவும் தங்களது வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாகவும், எதிர்காலம் குறித்து திட்டமிடலுக்கு உகந்ததாகவும் இருந்தது என பெருமிதம் கொண்டனர். மாணவியர் தலைவி இசபெல்லா நன்றியுரை வழங்கினார்.

தகவல் மற்றும் படம்:அதன் ராஜ்
                                               ---------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News