SOWNA TRUST சார்பில் நலத் திட்ட விழா

 சௌநா அறக்கட்டளை

 (SOWNA டிரஸ்ட்) 

சார்பில் நலத் திட்ட விழா.



    திருச்செந்தூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அறக்கட்டளை --"SOWNA அறக்கட்டளை"ஆகும்.



        2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை,- கல்வி ஆலோசனை, மேற்படிப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிகள், இலவச கண் அறுவை சிகிச்சை உதவிகள், கல்வி உதவித் திட்டங்கள், டி.என்.பி.எஸ்சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், வங்கி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், டியூஷன் வகுப்புகள்,முதியோர்களுக்கான நலப்பணித் திட்டங்கள் என பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது.




    சமீபத்தில் ,தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அடுத்துள்ள ஆறுமுகநேரி அருகில் அமைந்துள்ள சீனந்தோப்பு என்னும் கிராமத்தில் "லைட்" முதியோர் இல்லத்தில் SOWNA அறக்கட்டளை நலத்திட்ட உதவிகளை வழங்கியது.


        இந்த விழாவிற்கு லைட் முதியோர் இல்ல தலைவர் திரு .பிரேம்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.SOWNA அறக்கட்டளையின் தலைவர் திருமதி. சிவசெல்வி முன்னிலை வகித்தார். 



      திருநெல்வேலி மாவட்டம் ,ராதாபுரம் தாலுகா, செட்டிகுளம் இந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. லதா அவர்கள் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார்.விழாவில், திருச்செந்தூர் ,ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர் டாக்டர். கதிரேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.செட்டிகுளம் ,இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர் திரு .பெரிய நயினார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.



பேராசிரியர் டாக்டர் .நெல்லை கவிநேசன் SOWNA அறக்கட்டளையின் சிறப்புகளையும், பணிகளையும் பாராட்டினார்.



விழாவில், லைட் முதியோர் இல்ல உறுப்பினர்களுக்கு மளிகை பொருட்கள் ஆடைகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.


                                          ------------------------------------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News