ஏர்வாடியார் இனிய முகங்கள்

 

ஏர்வாடியார் இனிய முகங்கள் *சிறப்பு கவியரங்கம்* 


கவிதை உறவு இலக்கிய அமைப்பின் பொன்விழா மற்றும் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பவள விழா சென்னை வாணி மஹாலில் நடைபெற்றது. 

அதனை முன்னிட்டு *ஏர்வாடி இனிய முகங்கள்* என்ற தலைப்பில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. 

கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை தாங்கினார். "அன்பு முகம்" என்று கவிஞர் கங்கை மணிமாறன், "நட்பு முகம்" என்று கவிஞர் பிருந்தா சாரதி , நட்பு முகம் என்று கவிஞர் விமலா அண்ணாதுரை, கனிவு முகம் என்று கவிஞர் தமிழ் இயலன் வெற்றிமுகம் என்று கவிஞர்.கோ. கணபதி சுப்பிரமணியன் ஏறுமுகம் என்று கவிஞர் ஆதிரா முல்லை, கவிதை முகம் என்று கவிஞர் குடியாத்தம் குமரன் ஆகியோர் கவிதை பாடினர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியன், பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி, இயக்குநர் திலகம். எஸ்.பி முத்துராமன்,  டாக்டர் வி.ஜி சந்தோசம், கவிஞர் ஈரோடு தமிழன்பன் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், நீதியரசர் ஜெகதீசன், மற்றும் சிறப்பு விருந்தினர் பலர் கலந்து கொண்டனர்.

 கவிஞர்களுக்கு கலைமாமணி கவிஞர் ஏர்வாடி.எஸ் ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். 

கவிஞர்கள் சார்பில் பவள விழா நாயகர் கலைமாமணி கவிஞர் ஏர்வாடி.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சந்தனமாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


                                                  -------------------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News