அதிசய தர்கா

 மரப்பொந்தில் இருந்து 

பாங்கு சத்தம் கேட்கும்

 அதிசய தர்கா


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கண்ணியத்திற்குரியஸர்களே!

தேனி மாவட்டம் அல்லிநகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மகான் மல்கர் (வலி) தர்கா.

அல்லிநகரத்திலிருந்து வீரப்ப அய்யனார் கோவிலுக்குச் செல்லும் சாலையிலேயே பயணித்தால் அந்த சாலை கடைசியாக தர்காவிற்கே சென்று சேரும். தர்காவும் வீரப்ப அய்யனார் கோவிலும் மாமரங்களும் ஆலமரங்களும் சூழ்ந்த ஓர் அழகிய தோப்பில் அமைந்துள்ளன. 

மதநல்லிணக்கத்திற்கு அடையாளமாக இத்தலம் திகழ்கிறது.

இங்குள்ள ஆலமரத்தின் மீதிருந்தே மல்கர் அவுலியா தமது தொழுகை உள்ளிட்ட இபாபத்துகளை நிறைவேற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இன்னமும் கூட அந்த மரப்பொந்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்பதாக இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்...

மாஷா அல்லாஹ் இதன் அமைவிடம் மேற்குத் தொடர்ச்சி மலை‌ அடிவாரத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது... தமிழகத்தின் தர்காக்களில் பெரும்பான்மை மக்களால் அறியப்படாத தர்காக்களில் இதுவும் ஒன்று. தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் இந்த vlog உங்களை மல்கர் (வலி) தர்காவிற்கு அழைத்துச் செல்கிறது...


Post a Comment

புதியது பழையவை

Sports News