தேனியில் தேனீ விருதுகள்

 

தேனியில் நடைபெற்ற

‘தேனீ விருதுகள் வழங்கும் விழா 

- தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் 

முனைவர் வி. திருவள்ளுவன் 

விருதுகளை வழங்கினார். 

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் ஏற்பட்டு, அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த நிலையில் தேனித் தமிழ்ச் சங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ் இணையக் கழகத்துடன் இணைந்து 19-4-2020 முதல் 2-5-2020 வரை 14 நாட்கள் நாள்தோறும் ஒரு உரை நிகழ்வினை வழங்கியது. இந்த உரை நிகழ்வு கணினி மற்றும் மொழியியல் தொடர்புடையதாக அமைந்திருந்தது. இந்நிகழ்வினை அனைவருக்கும் பயனுடைய நிகழ்வாக மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, தேனித் தமிழ்ச் சங்கம், திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 4-5-2020 முதல் 31-5-2020 வரை நாள்தோறும் பயனுள்ள பல்வேறு தலைப்புகளில் உரைகளை வழங்கத் தொடங்கியது. நாள்தோறும் நிகழ்வுகளின் இடையில், ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டிமன்றம், கவியரங்கம், கதையரங்கம், நகைச்சுவையரங்கம் என்று சிறப்பு நிகழ்வுகளையும் வழங்கியது. 


அதன் பிறகு, வாரந்தோறும் உரை நிகழ்வுகளை வழங்க முடிவு செய்து, 7-6-2020 முதல் 26-6-2022 வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் உரையினைத் தொடர்ந்து வழங்கியது. இத்தொடர் உரை நிகழ்வு, 150வது நிகழ்வுடன் நிறைவு செய்யப்பட்டது. 

இணைய வழி 150 நிகழ்வுகளில் உரையாற்றியவர்களிலிருந்து 15 உரையாளர்கள் தேர்வு செய்யப்பெற்று அவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து இணைய வழியில் உரையாற்றிய 11 உரையாளர்களுக்கும் ‘சொற்சுவைத் தேனீ” எனும் விருதும், அதிகமான நிகழ்வுகளில் பங்கேற்றவர்களிலிருந்து 5 பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பெற்று, அவர்களுக்கு ‘தமிழ்ச்சுவைத் தேனீ’ எனும் விருதும், நிகழ்வுக்குத் தேவையான உரையாளர்களை ஏற்பாடு செய்து உதவியவர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி செய்தவர்கள் என்று ஏழு பேராளர்கள் தேர்வு செய்யப்பெற்று, அவர்களுக்கு ‘தமிழ்ச்சேவைத் தேனீ’ எனும் விருதும் வழங்க முடிவு செய்யப்பெற்றது. 

இதே போன்று,   தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம், பல்வேறு கல்லூரிகள், நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து 19 சிறப்பு நிகழ்வுகளையும் இணைய வழியில் சிறப்பாக நடத்தியது. இச்சிறப்பு நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்தவர்களில் இருவர் தேர்வு செய்யப்பெற்று, அவர்களுக்கு ‘முத்ததமிழ்த் தேனீ’ எனும் விருது வழங்கவும் முடிவு செய்யப்பெற்றது. 

அதனைத் தொடர்ந்து, முத்தமிழ்த் தேனீ விருதுக்கு, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா மற்றும் தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் ஆகியோர் ‘முத்தமிழ்த் தேனீ’ விருதுக்குத் தேர்வு செய்யப்பெற்றனர். 

ப. அருணகிரி (பயணநூல் எழுத்தாளர், சென்னை), முத்தாலங்குறிச்சி காமராசு (எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர், செய்துங்கநல்லூர், தூத்துக்குடி மாவட்டம்), முனைவர் ரெ. நல்லமுத்து (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தூய வளனார் கல்லூரி, திருச்சி), க. மகேந்திரன் (வழக்குரைஞர், தூத்துக்குடி), ப. புதுராஜா (பொருளாளர், தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்புக் குழு, கூடலூர், தேனி மாவட்டம்), கவிஞர் சோழ. நாகராஜன் (எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர், கலைவாணர் புகழ் பரப்புநர், மதுரை), முனைவர் க. கலா காசிநாதன் (கணினியியல் துறைத்தலைவர், நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலூர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர், காரைக்குடி), முனைவர் க. மலர்விழி (மொழிபெயர்ப்பாளர் மற்றும் கன்னட மொழித் துறைத்தலைவர், பிரசிடென்சி பல்கலைக்கழகம், பெங்களூர்), முனைவர் ந. புனிதலெட்சுமி (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அ. து. ம. மகளிர் கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம்),  முனைவர் பா. வேலம்மாள் (முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர், தென்காசி மாவட்டம்), முனைவர் பொ. திராவிடமணி (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி, தஞ்சாவூர்), திருநங்கை பத்மினி பிரகாஷ் (உலகின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மற்றும் உதவிப்பேராசிரியர், கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்), முனைவர் கிருபா நந்தினி (இளம் ஆராய்ச்சியாளர், சூழல் நச்சுத்துறையியல், சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம், ஆணக்கட்டி, கோயம்புத்துர்),  முனைவர் அரங்க. மல்லிகா (தமிழ்த்துறைத் தலைவர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை), முனைவர் ஆ. சந்திரபுஷ்பம் (அறிவிப்பாளர், அகில இந்திய வானொலி நிலையம், திருநெல்வேலி) எனும் 15 உரையாளர்களுக்கு ‘சொற்சுவைத் தேனீ’ விருதுக்குத் தேர்வு செய்யப்பெற்றனர்.

இதே போன்று, காசி. ஜீவலிங்கம் (எ) யாழ் பாவாணன் (உறுப்பினர், தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்), இலங்கை), மதியழகன் இராசதுரை (அதிபர், ஒட்டாவா தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டாவா, கனடா), வேணுகோபாலன் அருணாச்சலம் (முதல்வர், மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை (West London Tamil School incorporating with OFAAL), இலண்டன்), செல்வி. ஐஸ்வரியா கணேசன் (விரிவுரையாளர், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை), வாசுகி நடேசன் (மேனாள் ஆசிரியர், சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம், இலங்கை (இருப்பு: இத்தாலி)), முனைவர் சித்ரா சிவக்குமார் (பகுதிநேர விரிவுரையாளர், ஸ்கோப் சிட்டி பல்கலைக்கழகம், ஹாங்காங் மற்றும் இயக்குநர், அகம் சொல்யூசன்ஸ் ஹாங்காங் நிறுவனம், ஹாங்காங்), திருமதி. மதிவதணி (எ) வாணமதி (உடல் உளநலப் பராமரிப்பாளர், சுவிஸ் அரசுப் பள்ளி, சூரிச் மாநிலம், சுவிட்சர்லாந்து), ம. நிரேஷ்குமார் (முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி, கோப்பாய், இலங்கை), முனைவர் சீ. வத்சலா (கரித்தூள் சிகிச்சை வல்லுநர், மேனாள் வேதியியல்துறைப் பேராசிரியர் மற்றும் தன்னார்வ நோய்த் தணிப்புக் கண்காணிப்பாளர், கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையம், பெங்களூர் (இருப்பு: இலண்டன்)), கலாநிதி. தெட்சணாமூர்த்தி பிரதீபன் (சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் இசைத்துறைத் தலைவர், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு, இலங்கை), முனைவர் சொ. இலக்குவன் (நியூசிலாந்து அரசு கல்வித்துறை, ஆக்லாந்து, நியூசிலாந்து) ஆகிய வெளிநாடுகளிலிருந்து உரையாற்றிய 11 உரையாளர்களுக்கு ‘சொற்சுவைத் தேனீ’ விருதுக்குத் தேர்வு செய்யப்பெற்றனர்.

இணைய வழியிலான 150 நிகழ்விற்குத் தேவையான உரையாளர்களைத் தேர்வு செய்து வழங்கிய முனைவர் துரை. மணிகண்டன் (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி), முதுமுனைவர் மு. ஐயப்பன் (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வ. உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி), முனைவர் மா. சிதம்பரம் (இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி), பழ. பாஸ்கரன் (ஆசிரியர், மகரிசி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி), கோ. மணி (துணை முதல்வர், ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை) ஆகிய ஐவருக்கும்,  உரை நிகழ்வுக்கான தொழில்நுட்ப உதவிகளைச் செய்த மு. சு. முத்துக்கமலம் (துணையாசிரியர், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், தேனி), நெ. நிலவன் (முதுநிலை கணினி அறிவியல், இரண்டாமாண்டு, புனித வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி) ஆகிய இருவருக்கும் என்று மொத்தம் 7 பேராளர்களுக்கு ‘தமிழ்ச்சேவைத் தேனீ’ விருது வழங்குவது என முடிவு செய்யப்பெற்றது.

இதே போன்று,  இணைய வழியிலான 150 நிகழ்வுகளில், அதிகமான நிகழ்வுகளில் பங்கேற்றவர்களிலிருந்து, முனைவர் தெ. வாசுகி (தமிழ்த்துறைத் தலைவர், அ. துரைச்சாமி நாடார் மரகத வல்லியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம்), முனைவர் ஜா. ஜூலிபிரதிபா (உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வு நடுவம், டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை), அ. அமலா (பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), அரசு உயர்நிலைப்பள்ளி, மாமண்டூர், திருவண்ணாமலை மாவட்டம்), முனைவர் ப. கவிதா (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சி. கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி, கடலூர்), முனைவர் செ. சாந்தி (உதவிப்பேராசிரியர், வ. உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி) ஆகிய 5 பேர் ‘தமிழ்ச்சுவைத் தேனீ’ எனும் விருதுக்குத் தேர்வு செய்யப்பெற்றனர். 

‘இணைய வழி நிகழ்விற்கான நிறைவு விழா மற்றும் விருதுக்குத் தேர்வு செய்யப்பெற்ற அனைவருக்கும் விருதுகள் வழங்கும் விழா’வினைத் தேனியில் நடத்த முடிவு செய்யப்பெற்றது. 

அதனைத் தொடர்ந்து, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து தேனி நகரில், வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டல் கூட்ட அரங்கத்தில் 9-7-2022, ஞாயிற்றுக்கிழமையன்று, “இணைய வழி தமிழ் உரைகள் 150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா”வினை நடத்தியது. இவ்விழாவிற்கு, திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி, செயலாளர் சு. சி. பொன்முடி, பொருளாளர் அ. முகமது பாட்சா, துணைத்தலைவர் அ. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் மு. ரேணுகாதேவி வரவேற்றார். தேனி, கம்மவார் சங்கம் பொதுப்பள்ளியின் செயலாளர் சேதுராஜன் வாசு வாழ்த்துரையும், திண்டுக்கல் ஆர்.வி.எஸ். கல்விக் குழும இயக்குநர் முனைவர் வை. கிருஷ்ணகுமார் பாராட்டுரையும் வழங்கினர். இவ்விழாவில் தஞ்சாவூர், தமிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதாளர்கள் அனைவருக்கும் விருதுகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார். விருது பெற்றவர்களின் சார்பாக, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா, சென்னை, ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் துணைமுதல்வர் கோ. மணி ஆகியோர் ஏற்புரைகளை வழங்கினர். 

இவ்விழாவில், தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும், புகழ்பெற்ற காய்கனிச் சிற்பக் கலைஞருமான மு. இளஞ்செழியன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு, தர்ப்பூசணியில் துணைவேந்தர் உருவத்தினை உருவாக்கிப் பரிசாக அளித்தார்.  முடிவில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் இரா. முருகேசன் நன்றி கூறினார்.


                                                               ----------------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News