திருநெல்வேலி இருபெரும் விழா.

 

திருநெல்வேலி சந்திப்பு 

மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் 

இரு பெரும் விழா.



திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பில் நூலக தந்தை டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் 130 வது பிறந்தநாள் விழா மற்றும் 75 ஆவதுசுதந்திர தின பவள விழா நடைபெற்றது.

வாசகர் வட்டத்தின் தலைவர் முனைவர் சரவணகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர். முனைவர்.கோ.கணபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.சிவப்பிரகாச நற்பணி மன்றத்தின் துணைச்செயலாளர்.கவிஞர்.சு.முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார்.



 ராம்ராஜ் காட்டன் ஜவுளி நிறுவன மேலாளர் சார்லஸ் மாணவ மாணவிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தின் வெண்மை இதழை வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் பேச்சு போட்டி பாட்டு போட்டி மற்றும் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது கிளை நூலகர் ம. அகிலன் முத்துகுமார் நன்றி கூறினார்.

                                                               ----------------------------------


Post a Comment

புதியது பழையவை