அரவிந்த் கண் மருத்துவமனை விழா

 

ரோட்டரி அரவிந்த் கண் வங்கி 

மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை, 

அரவிந்த் சேவா குழந்தைகளுக்கான 7

கண் பரிசோதனை திட்டம்

 இணைந்து நடத்திய 

ஆசிரியர் தின விழா 




ரோட்டரி அரவிந்த் கண் வங்கி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை, அரவிந்த் சேவா குழந்தைகளுக்கான கண் பரிசோதனை திட்டம்இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

ரோட்டரி அரவிந்த் கண் வங்கி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 37வது தேசிய கண் தானம் இரு வார விழா நடைபெற்று வருகிறது. 

 ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது .

அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஆர்.மீனாட்சி முன்னிலை வகித்தார். கருவிழி பிரிவு மருத்துவர் அனிதா வரவேற்று பேசினார்.

 இதில் சிறப்பு விருந்தினர்களாக முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி.சுப்பையா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக சேவை செய்த மருத்துவ பேராசிரியர்கள்  முகமது ரபி, ராஜகோபால மார்த்தாண்டன், சுபாஸ் சந்திரன், தலைமையாசிரியர்கள் சுந்தரம், கணேசன், கணபதி, மற்றும் NSSDLO.ஆறுமுகசாமி, கவிஞர்கள் செல்வமணி, பாரதி கண்ணன், இளங்கோ,ஒவியர்கள் கணேசன், பொன் வள்ளி, உட்பட சிறப்பாக பணியாற்றிய 72 ஆசிரிய, ஆசிரியர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். 

விழாவில் டாக்டர்கள் ஆதித்யா, மாத்தூரி ஆகியோர் கண் தானம் குறித்து விளக்கவுரையாற்றினர்,கண் வங்கி பொறுப்பாளர் சாரதா, மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நிறைவாக முனைவர் கவிஞர் கணபதி சுப்ரமணியம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் ஆர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.

                                                     ---------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News