கொடைக்கானல் விழா..

 

கொடைக்கானல் 

அரசு மகளிர் கலை 

மற்றும்

 அறிவியல் கல்லூரியில்

 நூல் வெளியீட்டு விழா..
  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தமிழ் துறை மற்றும் குறிஞ்சி மன்றம் இணைந்து பன்னாட்டு அளவில் நடைபெற்ற கவியரங்கத்தின் சரித்திரம் படைக்கும் தலைசிறந்த கவிதைகள் என்ற தலைப்பில் அமைந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது 


  விழாவில் முன்னதாக, முனைவர் பா காந்திமதி அனைவரும் வரவேற்றார் மேலும் இந்த நூல் வெளியீட்டு விழாவை கல்லூரி முதல்வர் மா முருகன் ஐயா அவர்கள் நூலை வெளியிட இதை முனைவர் அரங்க சக்திவேல் முனைவர் கவிதா முனைவர் அமுதா ஆகிய சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர் 

       மேலும், தமிழ் துறையில் நடைபெற்ற இத்தகையோர் விழா மாணவிகள் முன்னேற வழிவகுக்கும் என தமிழ் துறையை பாராட்டினார் கல்லூரி முதல்வர்.  இந் நூலின் பதிப்பாசிரியராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழ்த்துறை முனைவர் ர. மங்கையர்க்கரசி மற்றும் திருமதி சு உமாதேவி வழி நடத்தி சென்றனர் .கா வெண்ணிலா மற்றும் திருமதி வா பொதுமணி நன்றி உரையாற்றினார்.

 இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்துபேராசிரியர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விழாவை கண்டுகளித்து சிறப்பித்தனர் மேலும் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழாவின் நிகழ்வு கல்லூரி மாணவிகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது பாராட்டுக்குரியது.


Post a Comment

புதியது பழையவை

Sports News