TNPSC - P.Saravanan

 

TNPSC Group I Results 2022 

P.Saravanan 

 Assistant Director of Rural Development

சமீபத்தில் வெளியான குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று  ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநராக பணி ஆணை பெற்றுள்ளார் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் நிமிந்தப்பட்டி என்னும் குக்கிராமத்தை சேர்ந்த சரவணன் அவர்கள்.                                        

சரவணன் தனது பள்ளிப்படிப்பை  கரூர் மாவட்டம் க. பரமத்தியில் உள்ள அரசு  மேல்நிலைப் பள்ளியில்  பயின்றுள்ளார். தனது பொறியியல் பட்டப்படிப்பை மின்னணு தொடர்பியல் துறையில் கரூரில் உள்ள VSB பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தவர். பின்பு தொலைதூர கல்வி மூலமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாற்று பட்டம் பெற்றவர்.

திரு சரவணன்  இந்த தேர்வை தமிழிலே எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு சரவணன் ஏற்கனவே பொது சுகாதாரத் துறையில் உதவியாளராகவும், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை வரைவாளராகவும் பணிபுரிந்து விட்டு தற்போது திருப்பூரில் நெடுஞ்சாலை துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

சரவணனின் அப்பா திரு பழனிச்சாமி மற்றும் அம்மா வீரம்மாள் இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.  சரவணனின் மனைவி திருமதி வினோதினி ஓர் இல்லத்தரசி. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.  


This is an Exclusive Interview with Mr.P.Saravanan , who has cleared the TNPSC Group 1 Exam got the post of Assistant Director of Rural Development post. He has done his schooling from Government Higher Secondary School K.Paramathi, Karur district.  He completed his engineering degree in Electronics & Communication from VSB College of Engineering, Karur. He later completed his BA degree in History from Manonmaniam Sundaranar University through distance education.

Mr. Saravanan has already worked as Assistant in Public Health Department and Draftsman in Land Survey and Records Department and is currently working as Assistant in Highways Department in Tirupur.

Saravanan's father Mr. Palanichamy and mother Veerammal both work as agricultural labourers. Saravanan's wife Mrs. Vinothini is a Home maker. They also have a child.. It is worth mentioning that Mr. Saravanan studied entire School education in Tamil and wrote the examination in Tamil. All the Best

E-Mail: geethasamypublishers@gmail.com 

Instagram: Geethasamypublishers

Twitter: GeethasamyPublishers


Post a Comment

புதியது பழையவை

Sports News