(UNDERGRADUATE)
CUET (UG)
2024
பல்கலைக்கழங்களில் மாணவர் சேர உதவு சியுஇடி தேர்வு அறிவிப்பு
பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு உதவும் சியுஇடி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://madrasmurasu.com/wp-content/uploads/2024/02/CUET-UG-2024-Notification.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம்.
பல்கலைக்கழங்களில் இளநிலை (டிகிரி - UG) படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண் மூலம், நாடு முழுவதும் உள்ள 44 பல்கலைக்கழகங்களில் கலை & அறிவியல் இளநிலை படிப்புகளில் மாணவ, மாணவிகள் எளிதில் சேர சேர முடியும். பிப்ரவரி 27 - ஆம் தேதியில் இருந்து மார்ச் 26 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர், தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) https://exams.nta.ac.in/CUET-UG/ என்ற தளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க மார்ச் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 28 ஆம் தேதி வரை, விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பிறகு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
மே இரண்டாவது வாரத்தில் தேர்வுக் கூடச் சீட்டினை பதிவுறக்கம் செய்து கொள்ளலாம். மே 15 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை பொதுத் நுழைவுத் தேர்வு நடைபெறும். ஜுன் 30 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு குறித்த அனைத்து தகவல்களுக்கும் www.nta.ac.in, https://exams.nta.ac.in/CUETUG/ என்ற தளத்தை மட்டும் பார்க்க வேண்டும்.
இத்தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவியர் தங்களது விரும்பும் பாடம், மொழி, பொது அறிவு என்று மூன்று பிரிவுகளில் தேர்வு பாடத்திட்டம் இருக்கும். மொழிகள் பிரிவில் 33 மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 27 விருப்ப பாடங்கள் உள்ளன. இந்த இரண்டில் இருந்தும் 50 கேள்விகள் கொடுக்கப்படும். அதில், 40 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும். பொது அறிவு பகுதியில் இருந்து 60 கேள்விகள் கேட்க்கப்படும். அதில் இருந்து 50 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும்.
கூடுதல் விவரங்களுக்கு https://madrasmurasu.com/wp-content/uploads/2024/02/CUET-UG-2024-Notification.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம். 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட CUET (UG) நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் (CUs) அல்லது பிற பங்கேற்கும் நிறுவனங்களில் (மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட) சேர்க்கை கோரும் மாணவர்களுக்கு ஒற்றைச் சாளர வாய்ப்பை வழங்குகிறது. ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பதாரர்கள் 10 பாடங்களில் தோன்றும்போது முந்தைய பதிப்புகளைப் போலன்றி அதிகபட்சமாக ஆறு பாடங்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் பாடத் தேர்வுகளைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று ஷிப்டுகளில் பல நாட்களில் நடத்தப்படும்.
-----------------------------------------------------------------------------
கருத்துரையிடுக