வெள்ளி விழா !

மும்பை

 செட்டிகுளம் பண்ணை 

நற்பணி மன்ற 

 வெள்ளி விழா.மும்பை,செட்டிகுளம் பண்ணை நற்பணி மன்ற 25 வது ஆண்டு
 வெள்ளி விழா 31 .03. 2024 அன்று   நடைபெற்றது.விழாவிற்கு நற்பணி மன்ற தலைவர் திரு. எஸ்.லிங்கதுரை தலைமை தாங்கினார்.

கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு .எம் .ஆர் காந்தி , திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலர் டாக்டர். எஸ் . நாராயண ராஜன்(நெல்லை கவிநேசன்) , செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் எஸ் .அம்மா .செல்வகுமார் , நெல்லை, தென் மாவட்ட பா.ஜ.க பொருளாளர்,திரு. பி . பாலகிருஷ்ணன் , தமிழ்நாடு காவல்துறை ,முதுநிலை நிர்வாக அலுவலர்(பணி நிறைவு) திரு. நாமத்துரை ஆகியோர் கௌரவ அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.
செட்டிகுளம் தொழிலதிபர்கள், மற்றும் சமூக சேவகர்கள் திரு. பி .ராமச்சந்திரன் ,திரு . எம்.ஜெகன், திரு . என்.நாகலிங்கம், திரு எஸ்.கொடி வேல், திரு டி.ஆர். எஸ்.ஜவகர்  பாபு , திரு. ஜி.சக்திவேல் திரு.வி .ஜெபசிங், திரு .டி.ராஜலிங்கம் திரு. ஐ. சுயம்பு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மன்றத்தின் ஆலோசகர் திரு.பி. மேகலாவர்ணன் வரவேற்றுப் பேசினார்.

காலை முதல்  மதியம் வரை ஊர் மக்கள் கலந்து கொண்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

மதிய உணவுக்குப் பின்பு பிற்பகல் 3:30 மணிக்கு விழாவினை பெண்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

பின்னர்,சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிக்கனத்தில் சிறந்தவர்கள் ஆண்களா ?பெண்களா? என்னும் தலைப்பில் திரு. பி. மேகலாவர்ணன் அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

சிக்கனத்தில் சிறந்தவர்கள் ஆண்களே ! என்னும் தலைப்பில் அணித்தலைவர் திரு. பி அய்யா பழம்,திரு . பி.முருகேசன் மற்றும் திரு. டி. குருசாமி ஆகியோர் பேசினர்.

சிக்கனத்தில் சிறந்தவர்கள் பெண்களே! என்னும் தலைப்பில் அணித் தலைவர் திருமதி விஜயலட்சுமி கணேசன் திருமதி விமலா மகேஷ் திருமதி அமுதா முருகன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.செட்டிகுளம் பண்ணை நற்பணி மன்றத்தின் வெள்ளி  விழாவில் டாக்டர் எஸ் நாராயண ராஜன் அவர்களுக்கு (நெல்லை கவிநேசன்) பெருந்தலைவர் காமராஜர் நினைவு விருது வழங்கப்பட்டது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தெட்சண மாற நாடார் சங்க மும்பை கிளை தலைவர், திரு. எம் .எஸ். .காசிலிங்கம் ,செயலாளர் திரு. டபிள்யூ.மைக்கேல் ஜார்ஜ், திரு. எஸ். அண்ணாமலை, திரு.ஆர் .நித்தியானந்த பாண்டியன், திரு .ஏ பி .சுரேஷ் ,திரு .செந்தூர் நாகராஜன் ,திரு.செ. அப்பாதுரை, திரு. இ.தெய்வக்குமார், திரு. எஸ். பால்துரை திரு. சி.மணிகண்டன், திரு . எஸ்.யோவான் ,திரு. பி. பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

விழாவுக்கான ஏற்பாடுகளை செட்டிகுளம் பண்ணை நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.


விழாவில் செட்டிகுளம் புதுமனை ஸ்ரீரங்க நாராயணபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மும்பையில் வாழும் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

                                                        ------------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News