பேராசிரியர். லடிஸ் லாஸ் ரோட்ரிகோ
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பெருமகனார் பேராசிரியர். லடிஸ் லாஸ் ரோட்ரிகோ அவர்கள்.
.ஆதித்தனார் கல்லூரியில் 1979 ஆம் ஆண்டு மாணவனாக சேர்ந்தது என்னை அன்போடு அரவணைத்து, கல்வி புகட்டி ,ஒழுக்க நெறிகளை கற்றுத் தந்து, நிர்வாக திறமையை வளர்ப்பதற்கு அடித்தளமாக அமைந்தவர் பேராசிரியர் அவர்கள்
1979 முதல் 1982 வரை நான் பி.பி.ஏ துறையில் படித்த போதும், 1986 முதல் 2020 ஆம் ஆண்டு வரை படித்த கல்லூரியில் உதவிப் பேராசிரியராக சேர்ந்து, பின்பு துறைத் தலைவராக பதவி உயர்வு பெற்ற போதும் என்னை பாசத்தோடு அரவணைத்து வழிகாட்டியவர் பேராசிரியர் லடிஸ் லாஸ் ரோட்டரிகோ அவர்கள்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் விழா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளைஞர் விழா, அரிமா சங்க நிகழ்வுகள், வீரபாண்டியன் பட்டண முக்கிய நிகழ்வுகள், குடும்பத் திருமண விழாக்கள், கல்லூரி துறை சார் ஆசிரிய பெருமக்கள் குடும்ப சந்திப்பு, அரிமா சங்க இதழ் தயாரிப்பு என பல்வேறு நிகழ்வுகளில் நான் பங்கு பெறுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்த பேராசிரியர் அவர்கள் நற்குணங்களின் நாயகராக திகழ்ந்தார்.
எனது வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட பேராசிரியரின் ஐந்தாம் ஆண்டு நினைவு திருப்பலி 27.07.2025 காலை 10 மணிக்கு வீரபாண்டியன் பட்டணம் கார்மல் மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
.
நல்லுள்ளம் கொண்ட பெரியவர் பேராசிரியர் அவர்கள் நினைவோடு நாங்கள் வாழ்கிறோம்.











கருத்துரையிடுக