சௌநா அறக்கட்டளை
(SOWNA TRUST)
சார்பில்
பாராட்டு விழா
சௌநா அறக்கட்டளை சார்பில்தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது
இந்து நடுநிலைப் பள்ளி
செட்டிக்குளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ம.விஷ்ணு , க.சுஜின்,
பொ. இராஜ சுதன் ஆகிய மூன்று பேர், 2025 - 2026 கல்வி ஆண்டில், தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
பாராட்டு விழா
விழாவிற்கு பள்ளி செயலர் மேகலாவர்ணன் தலைமை தாங்கினார். சௌநா அறக்கட்டளையின் சார்பாக அஞ்சுகிராமம் மெட்ரோ மொபைல்ஸ் உரிமையாளர் கணேஷ் சௌந்தரபாண்டியன் மற்றும் செட்டிகுளம் தொழிலதிபர் ஆனந்து ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
சௌநா அறக்கட்டளை சார்பாக தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர்.
மேலும், வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களால் பாராட்டப்பெற்றனர்.
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பா. பெரியநயினார் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி லதா மங்கேஷ் அவர்கள் நன்றியுரையில் ஆசிரியர் ஆசிரியை அனைவரையும் பாராட்டிப் பேசினார்.
கல்வி உதவித் தொகை
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ,
கல்வி உதவித் தொகையாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூபாய் 1000 வீதம் 4 வருடத்திற்கு 48000 ரூபாய் அரசு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
--------------------------------

.jpg)

கருத்துரையிடுக