பொதுஅறிவைப் புரிந்துகொள்வோம்-9

பொதுஅறிவைப் புரிந்துகொள்வோம்
- நெல்லை கவிநேசன்

பொதுஅறிவு சிந்தனைகளை ‘சிவில் சர்வீசஸ் தேர்வு’ (Civil Services Examination) எழுதுபவர்கள் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்விலும் (Preliminary Examination), முதன்மைத் தேர்விலும் (Main Examination) பொதுஅறிவுப்பாடம் (General Studies) முக்கியப் பங்கு வகிக்கிறது. இதுதவிர, நேர்முகத்தேர்வு எனப்படும் ஆளுமைத் தேர்விலும் (Personality Test) 250 மதிப்பெண்கள் பொதுஅறிவுக்கு வழங்கப்பட்டிருப்பதால் பொதுஅறிவைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்வது அவசியமாகிறது. 

பொதுஅறிவுப் பாடத்தயாரிப்பு என்பது மிக எளிதாக தோன்றினாலும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பொது அறிவுத் தயாரிப்புக்காக அதிக கவனம் செலுத்த வேண்டும். 

பொதுஅறிவுப் பாடப்பிரிவுகள்
பொதுஅறிவுப் பாடத்தை பொதுவாக 6 முக்கியப் பிரிவாக பிரித்துக்கொள்ளலாம். அவை - 
1. இந்திய வரலாறு (Indian History)
2.புவியியல் (Geography)
3.அறிவியல் (Science)
4.இந்திய அரசியல் (Indian Polity)
5.இந்தியப் பொருளாதாரம் (Indian Economy)
6.தற்கால நிகழ்வுகள் (Current Affairs)
- ஆகிய முக்கிய பிரிவுகள் உள்ளன. 
 
இனி - இந்த முக்கிய 6 பிரிவுகளைப் பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம். 

1. இந்திய வரலாறு (Indian History)
 
சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் இடம்பெறும் பொதுஅறிவுப் பாடத்தில் வரலாறு பாடம் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. இதேபோல் முதன்மைத் தேர்விலும் அதிக கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. வரலாறு பற்றிய பாடத்திட்டங்கள் அடிக்கடி மாற்றப்படுவதில்லை. எனவே சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் வரலாற்றுப் பாடத்தை மிக அதிக கவனத்தோடு படித்து வருவது சிறப்பை தரும்.

“வரலாறு” பாடத்தை படிக்கும்போது வரலாற்று சம்பவங்களை, நிகழ்வுகள் நிகழ்ந்த ஆண்டுகளோடு இணைத்து படிப்பது சிறந்ததாகும். குறிப்பாக - ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், பூனா ஒப்பந்தம், காந்தி-இர்வின் ஒப்பந்தம் போன்ற பல நிகழ்வுகளை விரிவாகவும், விளக்கமாகவும் தெரிந்துகொள்ள வேண்டும். 
 
“இந்திய தேசிய இயக்கம்” எவ்வாறு உருவானது? என்பதைப் பற்றியும், சமூகசீர்திருத்தம், இயக்கங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் இந்திய வருகை, சமயத் தலைவர், வேதங்கள், மாநிலங்களின் பண்பாடுகள், தொல்லியல் தகவல்கள், முக்கிய துறைமுகங்கள், வரலாற்று குகைகள், இந்திய தாதுப்பொருட்கள், முக்கிய பறவைகளின் சரணாலயங்கள், முக்கியத் தொழிற்சாலைகள், விடுதலைப் போராட்டங்கள், போன்ற எல்லாவிதமான தகவல்களையும் திரட்டிப் படிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். 

பொதுவாக இந்திய வரலாற்றை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். அவை - 
1.பழங்கால இந்திய வரலாறு  (Ancient Indian History)
2.இடைக்கால இந்திய வரலாறு (Medieval Indian History)
3.தற்கால இந்திய வரலாறு (Modern Indian History)
           -  ஆகும். 

பழங்கால இந்திய வரலாறு (Ancient Indian History) என்பது மிகப் பழமையான வரலாற்றைக் குறிக்கும். அதாவது பண்டைய கால வரலாற்றில் இடம்பெற்ற பல முக்கிய நிகழ்வுகளை இது சுட்டிக்காட்டும். மேலும் முற்காலத்தில் சமூக, பொருளாதார நிலைகள் எவ்வாறு அமைந்திருந்தன? என்பதையும் சமூக மாற்றங்கள், கல்விமுறை, கலை வளர்ச்சி, கட்டிடக் கலை, மதங்கள் ஆகியவற்றையும், அதன் தாக்கங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.  
 
இடைக்கால இந்திய வரலாறு (Medieval Indian History) என்னும் வரலாற்றுப் பிரிவில் பண்பாடு (Culture) பற்றி அதிக கேள்விகள் கேட்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இலக்கியம், வண்ணம் பூசுதல் (Paintings), கட்டிட கலையின் வடிவமைப்புகள், தொழில்நுட்ப மாற்றங்கள் போன்றவைகள் இந்த வரலாற்றுக் காலத்தில் எப்படி நிகழ்ந்தது? என்பதை அறிந்துகொள்ள இது உதவும். 

தற்கால இந்திய வரலாறு (Modern Indian History) என்பது புதிய இந்திய வரலாற்றை குறிப்பதாகும். சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் அது தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளை இது உள்ளடக்கியுள்ளது. இதனை விரிவாகத் தெரிந்து கொள்வதன்மூலம் இந்தப் பகுதியில் இடம்பெறும் கேள்விகளை எளிதில் சந்திக்கலாம். 
வரைபடங்கள் (Maps) உதவியோடு இவற்றை படிப்பது நல்லது.
 
இந்திய வரலாற்றைப்பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள உதவும் புத்தகங்களின் விவரம்:

1.Ancient India for VII – XII std - NCERT
2. Medieval India for VII – XII std -NCERT
3.Modern India - Bip in Chandra
4. History of Modern India - A.C. Banerjee
5.Modern India - B.L. Grover.
6. Social background of Indian nationalism - A.R. Desai
7.Freedom Struggle - Bipin Chandra
8.Modern India - Sumit Sarkar
9. An Advanced History of India - R.C.Majumdar, H.C.Raychaudhurai, Kalikinkar Datta
10.Ancient India Social and Culture - Luniya
11. Wonder that was India - A.L. Bhashem.
12.Medival India - L. Mukherjee
13.A Struggle for Independence - Bipin Chandra
14.Modern Indian History - Groover & Groover
15.Indian Feudalism - R.S. Sharma
16.European History - L. Mukherjee
17.South Indian History - K. Nilkantha Sastri

“இவ்வளவு புத்தகங்களையும், கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டுமா? அப்போதுதான் வரலாறு பற்றிய முழு தகவல்களும் தெரியுமா? சில முக்கியமான ஒன்றிரண்டு புத்தகங்களை மட்டும் பெயர் குறிப்பிட்டு படிக்கச் சொல்லுங்களேன்” என்று எனது சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய பயிற்சி வகுப்புகளில் மாணவ-மாணவிகள் அடிக்கடி கேட்பதுண்டு. 
அந்த மாணவ-மாணவிகளுக்கெல்லாம் நான் சொல்லும் விளக்கம் இதுதான். 

“இராமாயணம்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம், சிறுவர்களுக்கான இராமாயணம், இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகள் என நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்தாலும், படிப்பவரின் ஆர்வத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும் அடிப்படையாகக்கொண்டே இராமாயணம் புத்தகங்கள் தேர்ந்தெடுத்து வாசிக்கப்படுகின்றன. இதைப்போலத்தான் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்பவர்களில் பலர் தமிழ் வழியில் படித்தவர்களாக இருக்கலாம். ஆங்கில வழியில் படித்தவர்களாகவும் இருக்கலாம். பி.ஏ., பி.எஸ்.சி., போன்ற பட்டப்படிப்பு மட்டும் படித்தவர்களாகவும் இருக்கலாம். 
எம்.ஏ., எம்.எஸ்.சி போன்ற பட்டமேற்படிப்பு படித்தவர்களாகவும் இருக்கலாம். பி.இ., எம்.இ., போன்ற தொழில்நுட்ப படிப்புகளையும், பி.எல்., மற்றும் பி.ஏ.எல்.எல்.பி., போன்ற சட்டப்படிப்புகளையும் படித்திருக்கலாம். எனவே, தேர்வு எழுதுபவர்கள் தங்கள் கல்வி பின்னணிக்கு புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மிக அதிகமான அளவில் புத்தகங்கள் அடங்கிய புத்தகப் பட்டியலை வழங்குகிறேன். மேலும் இந்தப் புத்தகங்கள் அனைத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் சிறப்பாக வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் படித்த புத்தகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்”. 

இந்த பதில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான புத்தகங்களை சரியாக தேர்வு செய்ய உதவும் என நம்புகிறேன். 

இனி - சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத்தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் கடந்த சில ஆண்டுகளாக கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளைப் பார்ப்போம். 

1. With reference to the period of Mahajanapadas referred to in Bhddhist literature, which one of the following dynasties ruled Avanti?
          (a) Iksvaku (b) Haryanka (c) Paurava (d) Pradyota


2. Who deciphered the Brahmi script?
         (a) John F. Fleet   (b) James Princep   (c) Alexander Cunnigham (d) John Marshall


3. Which one of the following is the correct statement about the Sangam society of ancient South India?
(a) Slavery was not known to them
(b) The practice of Sati did not exist there
(c) The sacred marital thread Tali was unknown to them
(d) The women had no claim to the royal throne there

4. Match List I (Titles) with List II (Names) and select the correct answer using the codes given below the lists:
                 List I (Titles)                   List II (Names)
A. Madurai Konda             1. Vipranarajana
B. Tanjayur Konda             2. Parantaka I
C. Gangai Konda               3. Krishna III
D. Tondar – adip – podi     4. Rajendra I
Codes :
     A B C D
(a) 2 4 3 1
(b) 1 3 4 2
(c) 2 3 4 1
(d) 1 4 3 2

5. Who was the first Indian to be appointed as law member of the Governor – General’s Council? 
(a) Sir Tej Bahadur Sapru
(b) Alladi Krishnaswamy Iyyer
(c) B.R. Ambedkar
            (d) Satyendra Prasad Sinha (Lord Sinha)

விடைகள்
                            1.(d)            2. (b)              3.(a)                     4. (c)                 5.(d)
இதுவரை சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் இடம்பெறும் பாடங்கள், தயாரிப்புக்கு உதவும் புத்தகங்கள், முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் ஆகியவற்றைப் பார்தோம்.
 
சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுப் பாடத்தில் இடம்பெறும் புவியியல் பாடம்பற்றி சிந்திப்போம். 

Post a Comment

புதியது பழையவை

Sports News