ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-8




திருச்சி தெப்பக்குளத்தில்  ஒரு ஸ்டெரெய்ய்ய் ட்.. ட்.. ட்.  ட்… டைவ்...!




1985… ஒரு வெயில் நாளில்…
முதல் நாள் இரவு ஆனந்த் ஹோட்டலில் ஒரு பிறந்தநாள் கச்சேரியில் கிட்டார் வாசித்து முடித்து… லேட் டின்னரின் போதுதான் நான் எழுதிக்கொடுத்த பேனர் என்னை அழைத்தது … திருச்சி கவிதாலயம் ஸ்டுடியோ நண்பர் தான் அப்போதைய ஃபிலிம் கேமராவுடன் அங்கே வேறு ஒரு நிகழ்வில் கிளிக்கிக்கொண்டிருந்தார்.. நடு இரவு தாண்டி என்னையும் கிட்டாருடன் (குறைந்த வெளிச்சத்தில்)… சில படங்கள் நேரம் போனது. தூங்கி எழுந்ததும் லேட்!



மறுநாள் சிலோன் நண்பன் யோகாவும்  ஹோலிகிராஸ்ல எறங்கி…நடக்க …
சிங்காரத்தோப்பில் பானாஸோனிக் பெரிய ஸ்பீக்கரில் “ஆலிலையோ தொட ஆளில்லையோ” என்ற கங்கை அமரன் வரிகளின் கூடவே ஆபோகியில் வீணையோடு விளையாடியதை….கிட்டாரில் ட்ரை பண்ணிய நாட்கள்!




சாரதாஸ் அக்கவுண்ட்ஸ்ல ’அசோகா ஹோட்டல் ரவுண்டானா கிட்டே…              ( இப்போ எல்லாம் மாறிப்போச்சு  )  ஹோர்டிங் பெயிண்ட்டிங் 40x8 சைஸ்  முடிச்ச விவரம்  சொல்லிட்டு…. கிளைவ் ஹாஸ்டல் கடந்து..  தெப்பக்குளத்தின் வடமேற்கு மூலையில் உள்ள எங்கள்  'அன்னவாசல் '  (என்ற ஜோதி மெஸ்) நோக்கிய நடையில்..
அன்பில் தர்மலிங்கம் வீட்டு தெற்கு நோக்கிய வாசல் படித்துறை அருகில் வழியில் இடைஞ்சலாக   ஒரு 50-60 பேர் சூழ…என்ன்ன்ன நடக்குதுன்னு நடையை ஸ்லோ செய்தோம்!



தெப்பக்குளத்தின் பச்சை தண்ணிக்குள் எட்டிபார்த்து.. கையைக்காட்டி ....'இந்தா இந்த இடத்துல தான் நுரை ரொம்ப வருது...இன்னும் கொஞ்ச நேரத்துல பாடி மேலே மிதக்கும்....மேல வந்தா தான் தெரியும் ...யாரு ..என்னான்னு.....’

அடங்ங்ங் _ _ _ _ல !



நான் சுதாரித்த அந்த ஒரு செகண்ட் .....( இப்போதுகூட என் முழங்கை ஏரியாவில்  வரை ஒரு சிலிர்ப்பை உணர வைக்கும்! ) என் கிராமத்து பழக்கத்தில்  குருட்டுத்தனமான தைரியம் அது!   நண்பனிடம் உடைகளைக் களைந்து கொடுத்துவிட்டு…. எவ்வளவு ஆழம்… ஆளு யாருன்னு…..எதையும் கொஞ்சமும் யோசிக்காமல் (இராங்கியம் ஆலவயல் கேணியில… மோட்டார் ரூம் தகரத்துல ஏறி குதிப்பது போல)….நுரை வந்த புள்ளியை நோக்கி…கைகளை நீட்டி…
ஒரு ஸ்டெரெய்ட் ட் ட் ட்  ட் டைவ்.........



80 களில்… வருடக்கணக்கில் பராமரிக்கப்படாத தெப்பக்குளத்தின் அடர் பச்சைத் தண்ணீர் ஒரு ஆள் மட்டத்துக்குக் கீழே மேலும் அடர்த்தியாகி…பாசியும்… சகதியும்… லேயர் லேயராக ஜெல் மாதிரி விரல்களில் படிந்தது...  அதற்கும் கீழே லேசாக கையில் தட்டுப் பட்டது ….முடியுடன் ஒரு தலை…!

அடிக்கின்ற வெயிலில் தண்ணீருக்குள் விழித்த்த்த்த போதில் கிடைத்த…’செமி ட்ரான்ஸ்ப்பாரண்ட் வியூ” பச்சை மரகதக்கல் வழியா பாக்குற மாதிரி…. out of focuse ல ஒரு சிறுவனின் உடல் ...ஆடையின்றி ..வழுக்கும் அந்த உடலை மேலே தூக்க என் விரல்களில் பிடிமானமாகத் தட்டுப்பட்டது ...மின்னும் தாயத்து கட்டிய அரைஞாண் கயறு மட்டுமே!

40 செகண்டுக்கு மேலே ஆனதில் என் மூச்சு முட்டியது….!.
நான் ஏழடி மேலே வந்து ஒருமுறை மூச்செடுத்துக்கொண்டு...(மேலே என்னாச்சு என்று கத்திய கும்பல் யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமலும்) ...ஒவ்வொரு செகண்டையும் வேஸ்ட் பண்ணாமலும் ஒரு மூச்செடுத்து மீண்டும் உள்ளே சென்று அந்த அரைஞாண் கயிறையும் அவனின் தலைமுடியையும் பிடித்து இன்ச் இன்சாக அரை அடி வரை அந்தக் கயிறு அறுந்து விடாமல் விட்டு விட்டு இழுத்தேன் ...

ஆர்கிமிடிஸ் விதிப்படி… தண்ணீருக்குள் எடைகுறைந்த (!) அவன் முழு உடம்பையும் என் ஒரு கையில்...இழுத்தவாறே கரை வரை நீந்தி வந்து கரையில் அவனைத் தூக்கி நின்றேன்....வேடிக்கை பார்த்த மக்கள் யாரும் கிட்ட்ட்ட்ட்டத்த்த்த்துலே வரலை.. என் நண்பன் யோகாவைத்  தவிர..!

."நாராயணா ....அப்படியே அவனை ரெண்டு மூணு சுத்து சுத்து " (யார்ரா இந்த ஊர்ல… அதுவும்  என் முழுப்பெயர் மறந்த நாளில் (!)  பாசி அப்பிய கண் வழியே 'அந்நியன்'  look ல அந்தக் கூட்டத்தில் … என் ஊரைச் சேர்ந்த என் அக்காவின் கிளாஸ்மேட் பெரியகருப்பன் செட்டியார் வாட்டர் மார்க் போல 50% opacityல தெரிஞ்சார்!...

அவர் சொன்ன மாதிரி கைகளில் ஏந்தி என்னால் முடிந்த அளவில் சுத்தினேன்…. எண்ணி மூன்று சுத்து மட்டுமே…! அதன் பிறகும் நாலாவதாக தெப்பக்குளம் என்னை ஒரு  சுற்றியது...பசி மயக்கம்! ….சுதாரித்தேன் ....!


செத்துட்டான் போல…என நினைத்த எனக்கு….அவன் வாய் வழியே பச்சை நீர் வெளியேற… அந்த  உடம்பில் இதுவரையில் இல்லாத அந்த லேசான அசைவு கண்டதும்   எனது உடம்பின்  UPS… இன்வெர்ட்டர்… பவர் பேங்க்.. எல்லாம்  ஆன் ஆகி தெம்பாகியது.

அதன் பிறகு நெருங்கிய கூட்டத்தின் உதவியுடன் செயற்கை சுவாச முதலுதவி செய்து…. (சிதறிக் கிடந்த அவனது உடைகளை அணிவித்து) படித்துறையில் கிடந்த மூடிய டிபன் பாக்ஸ்… ஒரு ஒயர் கூடை போன்ற.. பொருட்களுடன்…..
கிடைத்த ஆட்டோவில்…என் மடியில் தலையை தாங்கி அவன் முகத்துக்கு முகம் அருகில் வைத்து அவனது லேசான மூச்சு இழுப்பு இருப்பதை அவ்வப்போது  உறுதிசெய்து கொண்ட நிடங்கள்  இந்த ஜென்ன்ன்ன்ன்மத்துக்கும் மறக்க்க்க்க்க்க்காது.

அருகிலிருந்த சிங்காரத்தோப்பு .............. டிஸ்பென்சரிக்கு விரைந்தது ஆட்டோ!...

சினிமாவில் வரும் சீன் மாதிரியே # Form filling ..# பேஷண்ட் பெயர்...#.இது போலீஸ் கேஸ் என்ற டாக்டரின் எகத்தாளமான பேச்சில் எக்கச்சக்க  வெறி ஏறி...வாக்குவாதம்  ஒரு கட்டத்தில்  'நீங்க  இப்போ செத்துக் கொண்டிருக்கும் இந்த பையனுக்கு ஒரு first aid  கூட கொடுக்க முடியலைன்னா
....அடுத்து வேற எந்த  hospital  எங்கேயும் போகமாட்டேன் ...நான் நேரா தினத்தந்தி பத்திரிகை ஆபிஸில் கொண்டு போய் போட்டுட்டு  இந்த உயிருக்கு இந்த டாக்டர் …(அவர் பெயர் ### சொல்லி) தான் காரணம்னு சொல்லிட்ட்ட்டு போய்க்கிட்டே இருப்பேன்' என்ற என் அதிரடி கத்தலில்…(அப்பவே ’மீடியா’ பயம் அவரது கண்ணாடி வழியே கண்களில் zoom பண்ணாமலே தெரிந்தது!)
மூக்கின் வழியே ட்யூப் நுழைக்கப்பட்டு…சுவாசப்பாதையில் அடைத்த லிக்விட் ஜெல் பாசிகள் வெளியேறியதில் அந்த சின்ன உடல் மயக்க நிலையில் ஒரு பெருமூச்சு எடுத்தது… சுற்றியிருந்த  எங்களுக்கும்…அதே நிலை!

FIRST AID அவசரகதியில் நடந்து முடிய...அதே ஆட்டோவில் பாலக்கரை… ரயில்வே கேட்..  தில்லை நகரைக் கடந்து  G H  க்குள் நுழைவாயிலில் நின்றிருந்த போலிஸ்காரரையும் சைகையால்  துணைக்கு அழைத்துக்கொண்டோம்.


  அவனது உடைமைகள் பாக்ஸ் மற்றும் தோளில் மாட்டும் வயர் கொண்ட ரோஸ் கலர் வாட்டர் பேக்… எல்லாவற்றையும்… போலீஸ் முன்னிலையில் ட்யூட்டி டாக்டரிடம் பையன் பேரு தெரியாத நிகழ்வு விவரம் சொல்லி… என் முகவரி சொல்லும்  "Moon Arts'  விசிட்டிங் கார்டையும் ஒப்படைத்த போதில்….டாக்டரும் காவல்துறையும் ’நீங்க கிராமத்து ஆளுன்னு நல்லா தெரியுது’ என்னும் வரிகளில் என் பெருமைமிகு இராங்கியம் ஸ்லைடாக வந்து போனது.!       
அத்துணை நேரமும் கூடவே உதவியாய் வந்த்தும்.....பணம் வாங்கமறுத்த ஆட்டோகாரருக்கு...  டீ பிஸ்கட்டுடன் நன்றி தெரிவித்து அவரையும் அனுப்பிவிட்டு ....அடுத்த பஸ் ஏறி அதே  ஜோதி மெஸ்ஸில் 3 மணி அளவில் மதிய உணவுக்கு entry கொடுத்த போது விஷயம் பரவி ... மெஸ் நண்பர்கள் மத்தியில் என் status… …எகிறியது.

அப்போதைய தூர்தஷன், ஆல் இந்தியா ரேடியோ அளவுக்கு பேசப்படலைன்னாலும்…    மறுநாளுக்கு மறுநாள்  அந்த விஷயம்... எப்படியோ எடிட் ஆகி இரண்டு மூணு வரியில் தெப்பக்குளத்தில் காப்பற்றப்பட்ட சிறுவன்…என தந்தி பேப்பர் செய்தியாகியிருந்ததில் மீண்டும் ஜி.ஹெச் போகாமலே அப்டேட் கிடைத்த சிறு மகிழ்வு!

அப்போது முதல் சில வாரங்களுக்கு …மெஸ்ஸில் எனக்கு  இலை போடும் போதிலிருந்தே ஒரு வித்தியாசத்தை உணரமுடிந்தது ... மெஸ் பையனை அந்த ஓனர் வழக்கம்போல் " எட்டி மிதிச்சேன்னு வையி ... தெப்பக்குளத்துல போய் விழுவ '' என்று திட்டும்போது "அதான்  நாணா அண்ணே  இருக்காருல்ல" என்னும் அளவுக்கே பேசப்பட்டு.. அந்த சம்பவம் பின்னாளில்  மறக்கப்பட்டு…. வழக்கம்போல் சைன் போர்டுகளில் கவனம் குவிய…


அந்த சம்பவம் நடந்து ஒரு  வாரம் கழித்து அந்த டாக்டரும் இன்னொருவரும் என் 'மூன் ஆர்ட்ஸ் ' வாணப்பட்டறை அட்ரஸ் தேடி வந்து நன்றியை கண்ணீருடன் தெரிவித்த போது தான் அவன் வீட்டுக்கு ஒரே பையன் என்பதும்…


.
நான் விசிட்டிங் கார்டு கொடுத்துட்டு வந்த அந்த  அரசு மருத்துவரின் நட்புவட்டத்தில் உள்ள மற்றுமொரு டாக்டரின் பையன்கள் படித்த ஈ.ஆர் பள்ளிக்கு பரீட்சை நேரத்தில் தவறவிட்ட.. வாட்டர் பாட்டில் சகிதம் வந்து ஆர்வத்தில் ஆழம் தெரியாமல் வழுக்கிச்சென்ற தகவலும் தெரியவந்தது.

நான் செய்த உதவிக்கு ’ஒருகவர் போன்ற வஸ்துவை அவர் என் கையில் கொடுக்க எவ்வளவோ முயற்சித்தார்…! அந்த நிகழ்வுக்கு விலை கொடுத்து அவமதிக்க வேண்டாமெனச் சொல்லி….அந்தக் கவரை அவரிடமே வெச்சுக்கச்சொல்லி…. அப்பவே ”பணமதிப்பிழப்பு” நடவடிக்கை செய்து அனுப்பிவிட்டேன்!


25 வருடங்கள் கழித்து ஒரு நாள் கூவம் ஆற்றில்  ஒரு குழந்தையை காப்பாற்றிய ஹீரோ ...தினேஷ்...  மேட்டர் முலம் ...  அப்போது திருச்சியில் இருந்த Jayalakshmi Nambiar முகநூலில் நினைவூட்ட ...  Trichy K Shiva, முள்ளிக்கரும்பூர் துரை. பாஸ்கர், Mangaladasan Pandian பகிர்ந்துகொண்ட…இந்த நிகழ்வு…. மீண்டும் சென்னையில் (FOR) friends of Roads அமைப்பின் மூலம் அந்த கோல்டன் நொடிகளை கையாண்ட விதத்தை காவல்துறையுடன் பாராட்டியதில் மேலும் மகிழ்ச்சி! 

அன்று தெப்பக்குளத்தில்  செத்துப் பிழைத்த அந்த First person  'முத்துச் செல்வம்' ஒரு வேளை நேரில் வந்தால்...! # இதன் இரண்டாம் பாகம் எழுதலாம்!  

8 கருத்துகள்

  1. அப்பாடி முடிஞ்சுச்சு....ஒரு 15 நிமிடம் செம டெஞ்சனான விருவிருப்பு....பையன் நன்றி சொல்ல வந்த நிமிடம் நிம்மதி பெருமூச்சு....பெருமிதம் கொள்கிறேன்.உன் தோழமை வாய்த்தமைக்கு....அலாய்சியஸ்

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.வார்த்தைகளே இல்லை.உங்கள் நட்பில் பெருமிதம் கொள்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. உங்கள் அருமையான கடந்தகால நிகழ்வுகள் நல்ல விருவிருப்பு சொல்லும் விதம் சூப்பர்-அன்புடன் ராஜே

    பதிலளிநீக்கு
  4. மனிதநேயம் , simplicity,இனிமை எழுத்தில் நன்றாகத் தெரிகிறது. அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News