ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-10தங்கராசு ரிலேன்

எனது இராங்கியம் கிராமத்துக் கடைவீதியில்…. மொத்தமே 10  கடைகள் தான். அதுவுமே ராவுத்தர் மளிகை கடை தேவராஜ் பெட்டிக் கடை.. பாபு சைக்கிள் கடைன்னு   இயற்பெயருடன் வினைச்சொல்லும் சேர்ந்த வினைத்தொகையாக   ’வீரபாகு’ பேக்கரி மாதிரி!
சைன் 
போர்டு தேவை இல்லாத ‘ஒத்தக்கடைகள்’ monopoly லெவலு!  அதையும் மீறி ‘சீத்தாலெட்சுமி ஸ்டோர்ஸ்ன்னு முதன் முதலில் போர்டு எழுத வாய்ப்பளித்த திரு.நாகராஜன் செட்டியார் அவர்களுக்கு என் மானசீக நன்றி என்றும் உண்டு!
இராங்கியத்தில் இரவு சாயும்போதும் ….இலைகள் மூடாத ’உறங்கா புளி’ய மரத்தின் இலைகளே விபூதியுடன்  பிராசாதமாக வழங்கப்படும்…. பிரசித்தி பெற்ற இராங்கியம் கருப்பர் கோவில் சுற்று வளாகம் தான் கிட்டி…பம்பரம் கபடி & கோலி…க்கான விளையாட்டுத்திடல்!

என் கல்லூரிக் காலத்தில் லெண்டிங் லைப்ரரி நட்த்தி…கூடவே என் ஓவிய ஆர்வம்  கொஞ்சம் overflow ஆகி… (பி.காம்ஃபர்ஸ்ட் இயர் @ லாஸ்ட் பென்ச்) கல்லூரி மாணவர் தலைவர் தேர்தலுக்கு தார் ரோட்டில் (சுண்ணாம்பு மாதிரியான வெல்டிங் கம்பெனி கழிவு கார்பைட்  ஊறவைத்து )  VOTE for Muthusamy ன்னு 100 மீட்ட்ட்ட்ட்டர்.. நீளத்துக்கு x ரோடு அகலத்துக்கு பெயர் எழுதி ( நானும் one yr senior pon. சுந்தரமும்!)…அது எல்லார் கண்ணுலயும் பட்டுஎதிர் முகாம் கடுப்பாகி .கல்லூரி முதல்வர் வரைக்கும் போயி..எக்கச்சக்கமா மாட்டி…ரொம்ம்ம்ம்ப நேரம்..
#*@#$* செம்ம ரா…..டு’…! 
ஆபத்பாந்தவர் Physical director ஜெயபாலன் சாரோட சொந்த ஜாமீன்ன்ல வெளியே மீண்டு வந்தேன்…!
ஜெயபாலன்ன்னு அழகா அவருக்கு பெயர்ப்பலகை எழுதிக்கொடுத்த வகையிலும் Ball Badminton…college team ல எதிர்காத்தை அனுசரித்து சர்வீஸ் போட்ட வகையில் செலக்ட்டட்(!) ஆன நெருக்கத்தில் …)
(பூலாங்குறிச்சி வ.செ.சிவலிங்கம் செட்டியார் அரசு கலைக்கல்லூரி என்று சொல்வதை விட(!)
 # கூட மேல கூட வெச்சு….ஸாங் …ரம்மி படத்தில் வரும் கல்லூரி என்றால் ஈஸி டு கெட் மெமொரி!  ’
ரம்மி படத்தின் இயக்குநர் நண்பர் பாலகிருஷ்ணன் எங்கள் கல்லூரி மாணவர்!
படம் முழுதும் பூலாங்குறிச்சி ஏரியாதான்!)
மறுநாள் அக்கவுண்டன்ஸி கிளாஸ் …. கிளாஸ் ரூம் வாசலில் ப்யூன் எஸ்நாராயணன்னு என்னோட சர்டிபிகேட்  நேம் ப்ளஸ்…334 ரோல் நம்பர் சொல்லி அழைக்க…கிளாஸ் ரூம் அதிசய நிசப்தம்!மன்னிச்சுவிட்ட அதே பிரின்சிபால்….மறுபடி அழைப்பதா…!
என்னப்பா…
என்னாச்சு என்று vote for முத்துச்சாமி டீமும்….’வசமா மாட்னாண்டா ஆர்ட்டிஸ்ட் பையன்’ன்னு  …என எதிர் முகாமும் எதிர்பார்ர்க்கஎனக்குள் மறுபடியும்  மொதலேர்ர்ர்ர்ர்ர்ந்ந்ந்ந்தான்ன்ன்ன்னு உள்ளுக்குள்ள கெளம்பியது ஒரு வடிவேலு வாய்ஸ்…!

சீட்டைக் கிழிச்சு அனுப்பினால் எதிர்காலம் என்னாவுறது  ?????…
அப்பக்கூட….வீட்ல என்ன சொல்றதுங்கிறத விட..
கூடப்படிக்கிற (நாலேநாலு Girls என்ன நெனைப்பாங்கன்னு ????…ஒரே sad feelings  …(கூனிக் குறுகின்னு சொல்லமுடியாது!)
But…
அது ஒரு விதமான ’ஸ்டேட்டஸ்ல’ போடமுடியாத  ஒரு ஸ்டேட்டஸ் !
அதுக்கு இப்ப்ப்பப்.. போயி வேர்ட்ஸ் தேட முடியாது!
 ஆனா வெயிட்ட்ட்ட்ட்!….அங்கே விதி வேற மாதிரி வெளையாடியது!
கல்லூரி முதல்வர்  அறையில் சில புதுமுகங்களுடன் physical director ம் இருந்ததால்சற்றே தெம்பு… கல்லூரிக்குப் புதிதாக வாங்கி… மறுநாள் வந்திறங்க இருக்கும் 200 நாற்காலி
200 
டெஸ்க் டேபிள் எல்லாத்துலயும் VSSGAC -1, 2 என .செ.சிவலிங்கம் செட்டியார் கலைக் கல்லூரியின் சுருக்கம்)  200 சேர் டேபிள் செட்ஸ்ல… பெயிண்டில் பேர் எழுதணும்…(சென்னை அபிராமி குழுமம் குடும்ப அறக்கட்டளையிலிருந்து  விசிட்டுக்கு வருவதாக வந்த தகவல்) சீக்கிரம் ரெடியாகணும்!…பொன்னமராவதி சவுந்தர் என்னும் தொழில் முறை ஓவியர் கேட்கும் தொகையில் பாதி போதும் என்று  நான் சொல்ல ….ஒரு ஒப்பந்தப்புள்ளியானேன்! …
அந்த சனி ஞாயிறு இரண்டு நாட்களில் அசுர வேலை செய்து 1000 ரூபாயை பிரின்சிபால் என்னிடம் கொடுக்கும்போது…(
யாருக்கும் கிடைக்காத அனுபவம் எண் - 1)  பி.காம் முதல் வருடமே  நோட்டட் ஸ்டூடண்ட்! கல்லூரி நிர்வாகத்துக்கே மேலும் நெருக்கமானதில் எதிர்முகாம் மேலும் காண்டாகியது…#அது ஒரு கெத்து ஃபீல்…#ஸ்மைலிகள் எல்லாம் பொறக்காத பொற்காலம்!
பக்கத்து ஊர்.. கவிமணி மன்றம் புகழ் குருவிக்கொண்டான்பட்டியின்சபரி சவுண்ட் சர்வீஸ், கருப்பையா ஆசிரியர் மட்டும் தனி ரகம்! செல்லமா சபரி வாத்தியார்ன்னா எல்லருக்கும் ஒரு புன்முறுவல் வரும்! இனிய பண்பாளர்!
1980ல்-உல்லாசப்பறவைகள் வெளிவந்த நாட்களில் (inreco - mini record)  ரெக்கார்ட் பிளேயரில் 45 ஆர்.பி.எம் ல சுழல விட்டு மிகக்க்க்க்க்க்….. குறைந்த அளவில் சவுண்ட் வெச்சு அந்த ஒலிபெருக்கியை (யூனிட்  குழாய்ன்னு ’டமில்’ல சொல்வோம்!)  மடியில் கிடத்தி ’சபரி’ என எழுதியபடியே பாட்டுக்கேட்டுக்க்க்க்க்க்கொண்டிருந்தேன்.  பப்ப்ப்ப்பாப்பாம்… பப்ப்ப்ப்பாப்பாம்…
பாடலின் BGM ஆரம்பித்து 47 வது செகண்ட்ல தான்… ஜெர்மனியின் செந்தேன் மலரே…எஸ்.பி.பி குரல் ஸ்டார்ட் ஆகும்…(அதுவரைக்கும் ’சங்கராபரணம்’ ராகத்துக்குள்ளவே  ட்ரம்ம்ம்பட்டும்…wah..wah pedal கிட்ட்ட்டாரும் கலந்து கட்டி…நம்மளும் பிஜிஎம் கூடவே போயி ’ஹம்ம்ம்’ பண்ணவெய்ப்பார் ராஜா சார்!.)
அப்படியான ஒரு இசைப்பொழுதுக்கிடையில்…அந்த ’சபரி’ வாத்தியாரோட  ‘
மகரு’ ஆம்பிளி f i r e’ ல கைபட்டு திடீரெனக் கூட்டிய சவுண்ண்ண்ண்ட்ட்ட்ட்ட்... என் நெஞ்ஞ்ஞ்சு வழியே காதுக்கு ரிவர்ஸில் எகிறியதில்…. செவியில் வெகு நேரம் க்க்கூஊஊஊன்னு! MUTE mode ! …சரி.. இனி இருகாதுகளும் மூக்குக் கண்ணாடி மாட்ட மட்டுமே யூஸ் ஆகப்போகுதுன்னு …டிஸ்ஸால்வ்டு ட்ரான்ஸிஷன்ல.. ஒரு ஸ்லைடு வந்து போனது!  நல்லவேளை…
(வடிவேல் போல வாயைத்திறந்து மூடுனதுல )! ஓப்பன் ஆயிடுச்சு!
(
யாருக்கும் கிடைக்காத அனுபவம் எண் - 2)

கூலி கொடுத்து வேலை கொள்வோருண்டோ’ என்னும் பிட்டுக்கு மண் சுமந்த  திருவிளையாடல் வரிகள் போல்...அடிக்கடி எனக்கான எதோ சில untitled வேலைக்கான கூலியை prepaid போல  (முக்கியத் தேவைகளுக்கு… பி.காம். எக்ஸாம் ஃபீஸ் கட்ட…) சபரி வாத்தியார் (செல்லப்பெயர்)  முன் பணமாக தந்து உதவிய e-wallet (அப்பவே) நாட்கள் சுகமானவை!  அப்போ கத்துக்குட்டியான எனக்கு தொழில் முறை ஓவியர்களுக்கான தொகை தந்து ஊக்குவிப்பார்!  # அவருடன் சமீபத்தில் ஒரு செல்ஃபீ…என் அப்பாவுக்கு இணையான வழிநெறிகாட்டும் வி.ஆர்..என்றழைக்கப்படும் ராமலிங்க மாமாவுடன்!

வேலியில்லா பட்டதாரியாய் (note’ வேலி’) … கெடைச்ச வேலையெல்லாம் செய்தேன்நாடகத்தில் நடிச்சதுஅமராவதி புதூர் & திருப்பராய்த்துறை ஹாஸ்டலில் படிக்கும் உள்ளூர் பெரிய குடும்பத்துப் பிள்ளைகளை லீவுக்கு அழைத்தல்கொண்டுவிடுதல் ஃபீஸ் கட்டுதல் உட்பட!

எதிர்வீட்டு…திரு .வள்ளியப்ப செட்டியாரின் மகனுக்கு அப்படியான ஒரு திருப்பராய்த்துறை விசிட்டில்….காவிரி மேல் காதல் கொண்டு திருச்சிக்குப்புறப்படும்போதே மாற்றுதுணியையும் மறைத்துக் கொண்டுவந்து முக்கொம்பு ஏரியாவில் ஆசை தீரக் குளித்தேன்.
லிஸ்டில் பார்க்க இருந்த மலைக்கோட்டைகலையரங்கம்,நேரமிழப்பு நடவடிக்கையால் youtube ADVT போல ஸ்கிப்ப்ப்!.. கடைசி பஸ்ஸைக் கணக்கில் கொண்டு பயணித்த என்னை இடைமறித்து விரைவில் திறக்க இருக்கும் அவரது.. மஹாராஜா மெடிக்கலுக்கு ஒரு பேனர் எழுதித் தரச்சொல்லி.. என் திருச்சி வாழ்க்கைக்கு அஸ்திவாரமிட்டார்திரு.ஆர்.ஆர்.கண்ணன். (எங்கள் நட்பு 4 தலைமுறை தாண்டி வது தலைமுறைக்குள் பயணிக்கும் பெருமை கொண்டது)


பின்னர் சில வாரங்களில்.. மெடிக்கல்ஸ் திறப்புவிழா நாள் குறிக்கப்படஎல்லாருக்கும் ஏற்படும் நேர நெருக்கடிஅந்த  சமயத்தில் அதிகாலை 6 மணிக்கெல்லாம் ஓடி… ( அப்போ டாக்டர்ஸ்  velvette ஷாம்ப்பூ பாக்கெட் viral ) காவிரிக் குளியல் முடித்து ஈரத் தலையுடன்(!)… கையில் பெயிண்ட் பிரஷ் சகிதம் 12 அடி உயர  சாரத்தில் நின்றவனுக்குசொல்லாமலே டீப்பையன் தேடி வந்தது தேநீரை நீட்டினான்நம்ம தான் டீ சொல்ல்லிலிய்யேன்னு கீழே டீ மாஸ்டரைப் பார்க்க  ..அவர் தொப்பி அணிந்த இன்னொருத்தரக் காட்ட ( ஏரியல் வியூ) அவர் ” ஆறுவதற்குள்  டீ யை மொதல்ல சாப்பிடு’ என்ற (deaf & dum) சைகையிலே மெசேஜ் பாஸ் பண்ணார்  …அந்த டீ ஸ்பான்சர் ‘ராசி ஆர்ட்ஸ்.பாஸ்வின்சென்ட்..என்னும் பெயர் அறிமுகத்துடன் அதிகாலைப் பனியிலும் பணிவுடன் பணி செய்த என்னை அவர் யூனிட்டில் சேர்த்துக்கொள்ள ஆர்வப்பட்டார்!ஒரு professional ஆர்ட்டிஸ்ட்டின் தொழில்  நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கான வேலைவாய்ப்பு…அப்ளிகேஷன் இல்லாமலே கைகூடியது.
(
யாருக்கும் கிடைக்காத அனுபவம் எண் - 3)
அடுத்த சில வருடங்கள்   திருச்சியின் சில..சைன் போர்டுகள் என் sign பெறநானும் shine ஆனேன்னு சொல்லமுடியாது...(இல்லாட்டி சென்னைக்கு வந்துருக்கமாட்டேன்லோ!)

ராசி ஆர்ட்ஸ் நீநீநீளமான அலுவலக அறைக்கு… மூணறை அடி single door தான் வாசல்படி.
அதை 
அடைத்தபடி அலங்கோல அனாட்டமி’யில்…. ஒரு செமி ஸ்ஸ்ஸ்லீப்பர்….!
அந்தக்க்க்க் குடிமகனைத்…திட்டிவிட்டு தள்ளிப்போய் படுக்கச்சொல்லி உள்ளே நுழைந்து அமர்ந்தோம்…அதுல அந்த ஸ்லீப்பர் செல்… போதை சற்றே குறைவதாய் உணர்ந்து மேலும் போய் ரிசார்ஜ் ஏத்திக் கொண்டு திரும்ப வந்து…#*$@%&*#*$@%&* #*$@%&* உள்ளே இருக்க முடியாத அளவுக்கு ரிபீட்ட்ட் வேர்ட்ஸ்…(இப்போ… அதை யூனிக்கோடில் டைப் பண்ணமுடியாது!)  அந்த ஏரியா டெர்ர்ர்ர்  இன்ஸ்பெக்டரின்  பெயரைச் சொல்லி போன் செய்யப்போவதாய் அவன் காதில் விழும்படி சொல்லிவிட்டு எஸ்டிடி போன் வசதி இணைந்த எங்களின் வழக்கமான  டீக்கடைக்கு நகர்ந்தோம்.

அந்த நிகழ்வை சற்றே மறந்து கையில் டீ கிளாஸ் பிடித்த… அடுத்த நொடியில்….அதே குடிமகர் (வயதுக்கு மரியாதை ! )… எங்கள் தேநீர் ஆறுவதற்குள்அவர் சற்று தெளிந்த நிலையில் அங்கே மிகப்பணிவன்புடன்… என்னிடம் கைநீட்டி ’தங்கராசு ரிலேசன்’ என்றார்!  (ஆக்ட்சுவலி திருச்சில எனக்கு அப்படியாரும் ரிலேசன் இல்லையே என்ற யோசனையில்ல்ல்ல் கைநீட்ட…எங்க ஊர் ’பசுமை’ தங்கராசு வாத்தியார் முகம் வந்து போனது..….அதற்குள் பாஸ் வின்சென்ட் சாரிடமும் சென்று கைநீட்டி அவரிடமும் அதே மாடுலேஷன்ல.., மறுபடியும் ஒரு ’தங்கராசு ரிலேசன்’…! நீட்டிய கரங்களை தொட்டா தீட்டு போல கைகளை பின்னால் வெடுக்கென்று  இழுத்துக்கொண்டு….என்னை நோக்கி …. ஒரு ஹாஃப் ஸ்மைலியையும்....ரெண்டு கேள்விக்குறிகள் ப்ளஸ்… ரெண்டு மூணு டவுட் ஐகான்ஸ்களை  கம்போஸ் செய்து… பாஸ் பார்வையாலே மெஸேஜ் பாஸ் பண்ணார்!
… அந்த டெர்ர் இன்ஸ்பெக்டர் பேரு…+ போலீஸ் கம்ளைண்ட் என்றதில் போதை தெளிந்து விசாரணை நடவடிக்கையைத் தவிர்க்க விரும்பிகுடிமகர் எங்களுக்கு  ஃப்ரண்டு ரெக்வெஸ்ட்  கொடுக்க விரும்பி…’.கன்கிராஜுலேஷன்ஸ்’ என்பதை ஃபொனட்டிக்காக… தமிழ்ப்படுத்தியது’ தான் # ’தங்கராசு ரிலேசன்’ என அப்புறம் தான் தெரிந்தது
அந்த நிகழ்வின் தாக்கத்தில்அப்போதிலிருந்து  இப்போதும் எங்கள் நட்பு வட்டத்தில் இந்தியா டுடே கல்யாண்குமார்வேணுகோபால் பாபுஜிமங்களதாசன்ரெகோ, மற்றும் பலரும் சந்திக்கும்போது கைகுலுக்கலுடன்.. நாங்கள்  முதலில் சொல்லிக்கொல்வது’   ‘தங்கராசுரிலேஷன்’ தான்!
---மீண்டும் வருவேன்! 

4 கருத்துகள்

  1. அது அந்தக்காலம்...கடவூர் லைப்ரரிகளில் எப்போது புதுபுத்தகம் வரும், ரா.கி. முதல் சுஜாதாவரை ஒரே மூச்சில் படித்து முடிப்போம்...அப்புறம் வேற புத்தகம் இருக்காது என்று தெரிந்தும் சார் வேற இருக்கா என்று கேட்டுக்கொண்டே....ஆர்வமாய் அடுத்த புத்தகத்துக்கு தாண்டும் அதே ஆர்வமாய்...இந்த எப்பிசோட் படிச்ச சுகத்தில் அடுத்த தொடருக்காக காத்திருக்கும் உன் அலாய்சியஸ்

    பதிலளிநீக்கு
  2. தங்கராசு ரிலேசன், உண்மைக்கதை நன்றாக நகர்கிறது.
    தொண்டிராசு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News