ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-12





பெண்கள்  அறையில்.........
 ஒரு ஆண் சிலை! 
இயக்குநர் பாக்யராஜ்  ஐடியாவுல
 ஒரு லேஅவுட் முடிச்சு! 


  ‘’ரெண்டு லேஅவுட்ல ஒரு லேஅவுட்ட ரூம்க்கு வரச்சொல்லுப்பா’’…..............

என்று பாக்யா ஆசிரியர்ஃஇயக்குநர் பாக்யராஜ் சார் சொல்லும்போதே எங்க காதுல தேனாய் வுழும்……# ஜானி சார் கண்ணசைவில் ..நான்  ’வாய்யா மின்னல்’ங்கிற மாதிரி

அவர் முன்.. குறிப்பெடுக்க…கையில் நியூஸ்ப்ரிண்ட் மடிச்சு PIN அடிச்ச Rough Pad சகிதம்) 




சிறு வயது முதல் எதாவது பத்திரிகையில நாம வரைஞ்ச படம் வரணும்னு ஆசைப்படும் எல்லோருக்குமான ஓவிய ஆவல். அதுவே திருச்சி wall painting  வாழ்க்கையில் வெறியாக மாறியது. அதற்குக் காரணம் மணிவண்ணன் என்னும் சக ஆர்ட்டிஸ்ட்..ஒரே நேரத்தில் வாங்கிய குமுதம்.. விகடன்…திசைகள் மூன்றையும் கையில் வைத்துக்கொண்டு அவன் படிச்சுட்டுத்தான்..நான் படிக்கணும் என்பதற்காக அவன் நடந்துகொண்ட தருணங்கள் வேற லெவல்! அதற்கு ஒரு நன்றி சொல்லி நகர்வோம்!



பாக்யாவுல இந்த லேஅவுட் வேலை கிடைப்பதற்கு முன் சின்ன்ன்ன ப்ளாஷ்பேக்!
கோடம்பாக்கம்… அக்பராபாத் 2வது தெருஇ ரூம்க்கு வெளியே ஜானி சார் சைக்கிளின் ஹாண்டில் பார் ஃப்ரண்ட் கேரியர் கிளிப் ல...ஒரு பாலிதீன் பை!  ட்ரான்ஸ்பரண்டா தெர்து… அதில் ரப்பர் சொல்யூஷன் ட்யூப் (1988 கட் & பேஸ்ட் காலம்) ..ஒரு சின்ன ஸ்கேல்,சின்ன சிசர்ஸ் 2  ப்ரெஷ்,கொண்ட ஒரு செட்…  (அட…ஜானி சார்… எப்டி இவ்ளோ சீக்கிரம்…ரெடியானாருன்னு யோசிச்சு)  உள்ளே நுழைய தெக்கூர் அனிதாவுடன் (ஆண் பால்! எழுத்தாளர்) பேசிக்கொண்டிருக்க…அதற்குள் என்னை இடித்துக்கொண்டு பக்கத்து ஷெட் மெக்கானிக் பையன் முருகன் அவுராண்ட போயி…’வோணாவா…டூல்ஸ் பேக்’ (‘கண்டேன் சீதையை… போல ..ஒரு வினைமுற்றுத் தொடர்…. தமிழாசிரியர்  தண்டபாணி சார்… காதைத் திருகிய வலி… ஜிவ்வ்வ்வி.. மறைந்தது ) இன்னா சார்... யம்ம்ம்ம்மா நேரமாக்கீது... … டூல்ஸ் பேக்.. தாரவாந்துபூட்ஸ்ச்சுன்னா… அப்பாலிக்கா தொயிழ் செய்யவோணாவா? … என்ற அவன் தொழில்முறை சொல் வழக்கில் TOOLS BAG  என்ற வார்த்தைப் பிரயோகத்தை எண்ணி...எங்கள் மூவர் தலைக்குமேல் ஆச்சரிய ஸ்மைலிகள் அனிமேட்டட்டா மிதந்தன… ஸ்லோ மோஷன்ல!



80 களில் கமல் சார் ஆபீஸ்ல மய்யம் மாத இதழ் லே அவுட் முடிச்சிட்டு…மாலை நேரக்கூடலில்…(பூமாலை வீடியோ இதழ்).. வண்ணத்திரை முத்தாரம் எம்.ஜே. ரெகோ, டிகேவி ராஜன், உதவி இயக்குநர் கல்யாண்குமார், லேஅவுட் ஜானி சார், ராசி அழகப்பன், தெக்கூர் அனிதா, சபீதா ஜோஸப், தமிழ்மகன், துரை ராமச்சந்திரன், ஸ்ரீராம் செல்வராஜா, சம்பத், ஆன்ந்த நடராஜன்,  மற்றும் பலரும் சேர்ந்து எங்க டீம் கண்டுபிடித்த குறைந்த செலவில் ரொம்ப நேரம் பகிர்ந்து சாப்பிடும் வஸ்து... பொரியும் வேர்க்கடலையும் கலந்த கலவை!...மாலை நேரத்து சுவையும் சுகமும்...இன்றும் ரீவைண்டிங் ஆகும்!
நக்கீரன் கோபால் அண்ணன் முதல் இதழ் கொண்டுவருவதில் பிஸியாக இருந்த நேரம். பிலிமாலயா ஜிடி. சுந்தர் லேஅவுட்டில் டைப்போகிராபியோட கலக்குவார்...அவ்ளோ விஷயம் இருக்கும். (அப்போ என் மானசீக குரு...) அப்போ...புதியதாக பாக்யா என்னும் இதழ் தொடங்கப்போவதாக நண்பர் (அழியாத கோலங்கள் 2 )திரு எம்.ஆர். பாரதி லேசா ’குவிக்’கிலீக்ஸ் செய்தார். (5 வாரத்து இதழ்களுக்கான மேட்டர் ரெடி… நான் வரல….போய் என் பேரச் சொல்லிட்டு லேஅவுட்ட ஆரம்பிங்க…அவர் இன்றும் அதே பரபரப்பு கலந்த சுறுசுறுப்பு நண்பர்!)


(கல்யாண்…ஜானி சார்.. நானு) மூவரும் படையெடுத்தோம்...அந்த நேரம் டைரக்டர் சார் இல்லை...செக்கியூரிட்டி  கேட் திறந்து…புதிய டமிலில் ’வழி’ மொழிய...உள்ளே பொறுப்பாசிரியர் சஞ்சீவி சார்...’கோவை’ குளிர் மொழி…ப்ளஸ்..அவர் அன்பு ஓவர்ஃபுளோ ஆகி எங்கள் மேல் ஓடியது. (அதன் பின்னால்  ஒரு சின்ன்ன்ன்ன அதிர்ச்சி தந்தது)...அவர் மொழியில் ’அஞ்சு சுசூக்கி  மேட்டர் ரெடி’ என்ற மொழிப்பிரயோகம் மொதல்ல எதோ பைக் மேட்டர் போல….விளங்கல்ல்ல்ல! (ஐந்து issue..களுக்கான content ready எனப் புரிந்ததும் )   ...அப்பவே லேஅவுட் ஒர்க் ஸ்டார்ட் பண்ண அவசரப்படுத்திய அவரிடம் கம்ப்போஸிங் மேட்டர் எதுவுமில்லாமல் எல்லாம் A4 Sheetsல கைல எழுதிய manuscripts! அத வெச்சு என்னா செய்றதாம்????




ஹைடெக் ராஜேந்திரன் சார் கருணையுடன் கம்போஸிங்...லித்தோ & ஹாஃப் டோன்..நெகட்டிவ் by எஸ்.பி.எஸ். பிராசஸ் திரு. பொன்ராஜ் ...இன்னர் பேஜஸ் falcan printers… என வேலை எல்லாம் ’கரோனா’ வேகத்தில் பரவியது. நான்.. கல்யாண்… ஜானி சார் மூவரும் அவ்வப்போது…(இன்றும்)  ’அஞ்சு சுசூக்கி’ல ஒன்ன்றாவது வாங்கி ஓட்டணும்னு… கலாய்ய்ச்சுப்போம்!


தலையங்கம் 3-4 தொடர்கள்…கேள்வி பதில்,  பாலகுமாரன் கதைக்கு அரஸ்,   அனுராதா ரமணன்- மாருதி, பாக்யராஜ்- இரண்டாவது தாலி கதைக்கு ஜெயராஜ்  என மூன்று தொடர்கள், பெர்முடா ட்ரையாங்கிள், பிரமிட் மர்ம்ம்ஸ் என சஞ்சீவி சார் செளதாமினி  என்ற புனைப்பெயரில்…ஒரு சயின்ஸ் அமானுஷ்யத்துக்கு  ம.செ...மற்றும் ஜமால், கரோ, ஓவியர் ஸ்யா(ம்)  என்னும் ஜாம்பவான்களுக்கு மத்தியில் என் ஓவியங்களும் (!) (கல்யாண்குமார் எழுதிய வேதாளம் சொன்ன பிரச்சனைக் கதை மற்றும் ஒரு சில  கதைகளுக்கு) துணுக்குகள் குட்டி கவிதைகள்,,, போட்டிகள்.. ஜெ.பி சாருடன்…வாரம் ஒரு இன்ப அதிர்ச்சி அரசியல் கலந்த பரபரப்பான பத்திரிகை உலகம் எனக்கு அறிமுகமானது. ஓவியத்துக்கு காத்திருக்கும் சில நெடிய நேரம் மணியம் செல்வம் சார் வீட்டு சூடான வடையும் கிடைக்க…. என எல்லாம் சுகமே!


சரி… இப்போ விட்ட எடத்துக்கு வர்றேன்...
ஜானி சாரும் நானும் கலக்கிய லேஅவுட் பாக்யா இதழ்… ராதிகா மேடம் கண்ணுல பட்டு..அவங்களோட feed back (5000 லைக்ஸ்க்கு சமம்)...டைரக்டருக்கு பெருமை தாங்கல... நாணா…ஜானி என இன்றும் எங்கள் பெயர் அறிந்திருந்தாலும்  ’லேஅவுட்’ என்கிற வினைச்சொல்லே பெருமைமிகு பெயர்ச்சொல்லானது...
அன்று...தலையங்கம்.. கேள்வி பதில் அடங்கிய முதல் ஃபாரம் 16 பக்கம் பெண்டிங்..
மற்றவை  அல்ரெடி அச்சில்…!
’ரெண்டு லேஅவுட்ல ஒரு லேஅவுட்டாக அவர் முன் நின்றேன்...சில புத்தகங்கள் ஓரிரு பக்கங்கள் மூடிய நிலையில் சரியாக வெட்டுப்படாமல் ஒரு கத்தியோ பென்சிலோ வைத்து கிழித்து படித்திருப்பீர்கள்! அது மாதிரி… ஒரே ஒரு பக்கத்தை உள்மடிப்பாக வேண்டுமென்றே கிழித்துப் பார்க்கும்படியாக வைத்துவிட யோசனை முடிவாகி நேரம் கடந்தது. அதற்கு டைரக்டர் சுவாரஸ்யமா… ஒரு கதை சொல்லி … கம்போஸ் செய்யும்போது இரவு 9 மணி... 


கதை வசனத்திலகம்…பாக்யராஜ் சார் கதைப்படி ஒரு கலையரங்கத்தின் மகளிர்க்கான டாய்லெட்.. வாஷ்பேசின் கண்ணாடியில் தெரியும்படியான  அந்த அறையில் ஒரு அரை நிர்வாண ஆண் சிலை அதன் இடையில் ஒரு இலை வடிவில் தொங்கும் ..அதில் Don’t lift என்ற ஒரு வாசகத்துடன் ஆடை அமைப்பு  ஓவியம் தேவை...’இந்நேரத்துல ஓவியர்கள் யாரையும் தொந்தரவு செய்யாமல் நீங்களே… உடனே… வரைஞ்சுடுங்க நாணா அரை மணி நேரம்…வெயிட் பண்றேன்னாரு’… என்று என்னிடம் சொல்ல....குருவி தலையில் பனம்பழ பயம்! அது ஒரு மாதிரி டென்ஷன்…அவரைத் திருப்திப்படுத்த முடியுமா என யோசித்த shivering நொடிகளில்… .இந்த வாய்ப்பை விட்றக்கூடாது…என்றது உள்மனசு!



1988.. அப்போ கம்ப்யூட்டர் …கூகுள் இல்லா ... கற்காலம்…!
அப்போதெல்லாம்…Reference இல்லாமல் ஸ்கெட்ச் செய்து பழக்க(மே)மில்லை. இன்றும்கூட சில நேரம் அனாட்டமி ஒதைக்கும்னா பாத்துக்கோங்களேன்.  அந்த சமயத்தில்...ஓடவும் முடியாத ஒளியவும் முடியாத கொரோனோ அரெஸ்ட்..   டைரக்டர் பேச்சுக்கு  நோ அப்பீல்....அவசர கோலத்தில் எந்த ஒரு ref தேடவும் வசதியில்லாது)...எனக்கு தெரிந்த வரையில் இண்டியன் கொண்டு எனக்கு திருப்தியில்லாமல் எக்ஸாம் எழுதுற டைம் லிமிட்டில்..  எப்படியோ ஒன்னு கிறுக்கினேன்...இதுதான் நான் எதிர்பார்த்தது என்ற பாக்யாராஜ் சார் வார்த்தைகளில் எனக்கு சானட்டைஸரில் முக்கி எடுத்து அருவியில் குளித்த  லிரில் கேர்ள் …ர்ர்ர்ரரா…ராஆஆஆ…புத்துணர்ச்சி...!



மறுநாள் இரவுக்குள் 16 பக்க printed forme ரெடி…! சுடச்சுட புத்தகம் ரெடி!
அந்த மணிவண்ணன் போன்ற வாசகர்கள் கைகளில் கிடைக்க இரண்டு நாளாகும்!
முதல் பக்கத்தில் பாக்யாவில் பலானது அதிகமா? என்ற hand sciript… தலைப்புடன் பாக்யராஜ் சார் எழுத்துக்கு நான் வரைந்த படத்துடன்…
#18ம் பக்கத்தில் மூடிய மடிப்புடன்  இருந்த பேப்பரைக் …கிழித்து திறந்தால் உள்ளே..உள்ளே!
???????
அந்த இன்ப அதிர்ச்சியை… ஷேர் பண்ணவோ லைக் பண்ணவோ முடியாத அந்த ஒரு கையறு காலத்து நிலைத்தகவலை இன்று உங்களுக்குப் பகிர்வதில் எனக்கும் கல்யாண்குமார்… ஜானி சார்… மூவருக்கும் முப்பது வருடங்கள் தாண்டியும் பேரக்குழந்தைகளுடன்  பேரானந்தம்..!???????
பாக்யா சுவாரஸ்யங்கள் சொல்லி முடிக்க பல அத்தியாயம் வேணும்
வெயிட்டீஸ்!….
தொடர்வேன்!

Post a Comment

புதியது பழையவை

Sports News