ஆனந்தம் தரும் ஆத்திசூடி-1

ஆனந்தம் தரும் ஆத்திசூடி!
புலவர் டாக்டர். வை.சங்கர லிங்கம்



துன்ப மறந்திடு   (எண் 46)



செல்வம், அதிகாரம், பணம், புகழ், மதிப்பு ஆகியவை மன அமைதியை அழிக்கும் சக்திகளாக விளங்குகின்றன. வாழ்வில் என்னென்ன அடைய வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றி மனதை அலைக்கழிக்கின்றன.

தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவன், அதிகமான சொத்து, செல்வம் அடைந்தவன்,  ஆகியோருக்கு நிம்மதி கெட்டு விடுவதை நாம் பார்க்கிறோம். ஒருநாள் விட்டு ஒருநாள் தான் அவர்களுக்கு உறக்கம் கூட வருகிறது.

மனநிம்மதி இருந்தால்தான் எந்த செயலையும் பதட்டம் இல்லாமல் ஒருவரால் எளிதில் செய்ய முடியும். தன் தகுதியை உணர்ந்து அதற்குரிய செயலில் ஈடுபட வேண்டும்.


ஒரு நாள்

மனதில் நிம்மதியும், தூக்கமும் இன்றி தவித்த ஒரு பணக்காரன், அருகில் இருந்த ஆசிரமத்திற்கு சென்று ,குருவை சந்தித்து
"எனக்கு எல்லாம் இருந்தும் மன நிம்மதி மட்டும் இல்லை. அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் "என்றான்.
அதற்கு அந்த குரு, "தேவையில்லா சுமைகளை சுமப்பதும், தெரியக்கூடாத ரகசியங்களை தெரிந்து கொள்வதாலும் நிம்மதி போய் விடுகின்றது. 
நீ முதலில் ஆசிரமத்தில் சாப்பிடு" என்றார்.
 சாப்பிட்ட பின் ஒரு படுக்கையை காண்பித்து படுக்கச் சொன்னார்.

பிறகு அவனிடம் அந்த குரு ஒரு கதை சொன்னார். 

"ரயில் புறப்படும் போது அவசரமாக தலையில் சுமையுடன் ஒருவன் ஓடி வந்து ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டான். ரயில் புறப் பட்டது. 
ஆனால், அவன் தன் தலையில் இருந்த சுமையை மட்டும் கீழே இறக்கி வைக்கவில்லை.  சுமையை தலையில் சுமந்து வந்த ஆளைப்பார்த்து அதை கீழே இறக்கி வைக்கச் சொன்னார். 

ஆனால் அவன் மறுத்துவிட்டான்.

"வேண்டாம். ரயில் என்னை மட்டும் சுமந்தால் போதும். என் சுமையை நான் சுமந்து கொள்வேன் "என்றான்.

இதைக் கேட்ட அங்கு இருந்தவர்கள் சிரித்துவிட்டு,

"பைத்தியக்காரன், இரயிலை விட்டு இறங்கும்போது மூட்டையை தூக்கிக்கிட்டு இறங்கினால் போதாதா?"என்று கேட்டார்கள்.

இப்போது அந்த குரு மன நிம்மதி தேடி வந்தவனைப் பார்த்து, '

"அவனைப் போல தான் நீயும் இருக்கிறாய்". என்று சொன்னார்.

"என்ன சொல்கிறீர்கள் குருவே? என்று கேட்டார் அந்த பணக்காரர்.

"வாழ்க்கை என்பது ரயில் பயணம் போன்றது. பயணம் முழுவதும் சுமையை சுமந்து கொண்டு செல்பவர்கள் நிம்மதியாக வாழ முடியாது, 
தேவைபடுபனவற்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்." என்றார்.

உங்களுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்றால்,உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது அறிவாக இருந்தாலும் சரி,பணம், பொருளாக இருந்தாலும் சரி. அந்த மனித நேயம் இருந்தால் போதும, மன நிம்மதி அடைவதோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை நீங்கள் வாழலாம். 

இதைத் தான் பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் (புதிய ஆத்திசூடி எண் 46) 'துன்ப மறந்திடு' என்கிறார். ஆம் நண்பர்களே! துன்பத்தை தூக்கி எறிந்து இன்பம் பெறுவோம்.

தொடரும்

Post a Comment

புதியது பழையவை

Sports News