மத்திய பல்கலைக்கழகத்தில் சேர நுழைவுத்தேர்வு

 

மத்திய பல்கலைக்கழகத்தில் சேர நுழைவுத்தேர்வு
Common University Entrance Test 
[CUET (UG) – 2022] நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு, காமன் யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட் - சி.யு.இ.டி.(Common University Entrance Test [CUET (UG) – 2022] )

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்திய அரசின் சார்பில், மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமை - என்.டி.ஏ., இத்தேர்வை நடத்துகிறது. தற்போது இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு விபரம்:

மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெற உள்ள இத்தேர்வில் ’மல்டிபில் சாய்ஸ்’ வடிவில் கேள்விகள் இடம்பெறும். ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். 

தேர்வு மையங்கள்: 

நாட்டில் மொத்தம் 547 நகரங்களிலும், 13 வெளிநாடுகளிலும் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.

தேர்வு நாட்கள்: ஜூலை முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட உள்ளது.

தேர்வு நேரம்: காலையில் 195 நிமிடங்கள், மாலையில் 225 நிமிடங்கள் என இரண்டு பிரிவுகளில் தேர்வு நடைபெறுகிறது. முதல் பிரிவு காலை 9 மணி முதல் 12:15 மணிவரையிலும், மாலை 3 மணி முதல் 6:45 மணிவரையிலும் தேர்வு நடைபெறுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை: https://cuet.samarth.ac.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 6 

விபரங்களுக்கு: 

இணையதளங்கள்: https://www.nta.ac.in/ மற்றும் https://cuet.samarth.ac.in/

தொலைபேசி: 011-40759000, 69227700

இ-மெயில்: cuet-ug@nata.ac.in

Post a Comment

புதியது பழையவை

Sports News