முத்தாலங்குறிச்சி காமராசு
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஞாயிற்றுகிழமை தோறும் எழுதும் தொடர் இது. இந்த தொடரில் தூத்துக்குடி மாவட்ட வரலாற்றை எழுதுகிறார். படித்து கருத்தை தெரிவியுங்கள் .
1. தூத்துக்குடி பெயர்காரணம்
தூத்துக்குடியைப் பொறுத்த வரை, இங்கு தண்ணீர் பஞ்சம் அதிகம் எனவே கடற்கரையில் ஊற்றுத் தோண்டி தண்ணீர் தூர்த்துக் குடித்தக் காரணத்தினால் தூர்த்துக் குடியானது. இதுவே மருவி தூத்துக்குடியானது என்பர்.
கி.மு.123 இல் தாலமி என்ற கிரேக்கப் பயணி, தனது பயண நூலில் "சோஷிக் குரி"(சிறு குடி) சோதிக்குரை என்ற முத்துக்குளித்துறை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான், 'தூத்துக்குடி' என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை, ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்" என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.
கி.பி.80இல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் 'தூத்துக்குடி' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்க்கோ போலோ எனும் வெணிஸ் நகரப் பயணி, முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துறையைப் பற்றி, சென்னை அரசாங்கத்திற்கு, தான் சமர்ப்பித்த அறிக்கையில், தோத்துக்குரையாக மாறி இறுதியில் 'தூத்துக்குடி' என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி என்ற பெயர், ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று, 'தூட்டிகொரின்' என்று வந்துள்ளதென்று கால்டுவெல் விளக்கம் அளித்துள்ளார்.
(தொடரும்)
தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றை நூலில் படிக்க விரும்புவோர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” என்ற நூலை படியுங்கள்
நூலின் விலை 250/.
நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளவும்.
0--------------------------------
கருத்துரையிடுக