ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தகவல் களஞ்சியம்


புத்தகத்தைப்பற்றி…

‘நாளைய பாரதம் இளையோர் பாரதம்’ என்ற சொல்லிற்கு செயல் வடிவம் கொடுத்த பேராசிரியர் நெல்லை கவிநேசன் அவர்கள், இளைஞர் மேம்பாட்டிற்காக கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் சம்பந்தமான ஆலோசனைகளை, பல்வேறு ஊடகங்கள்மூலமாக, கடந்த 15 ஆண்டிற்கும் மேலாக செய்து வருவதைக்கண்டு நண்பர் என்ற முறையில் நான் பெருமிதம் கொள்வது உண்டு. பேராசிரியர் நெல்லை கவிநேசன் அவர்களுக்கு வருகின்ற கேள்விக் கடிதங்கள் மற்றும் பாராட்டுக் கடிதங்களின் எண்ணிக்கை, அவர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார் என்பதற்கு சான்றாகும். ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய தகவல்கள், கிராமத்தில் மட்டுமல்ல நகரத்தில் உள்ளவர்கள்கூட அறிந்திருப்பார்கள் என்று கூற இயலாது.

பேராசிரியர் நெல்லை கவிநேசன் அவர்களின் “ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கான தகவல் களஞ்சியம்” என்னும் இந்த நூல் ஒரு தகவல் சுரங்கம்... எளிய நடையில் பலரும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்தநூல் நிச்சயம் பலரின் பாராட்டுக்களைப் பெற்று பல ஆட்சியர்களை உருவாக்கும் என்பதிலும் ஐயமில்லை.

பேராசிரியர் நெல்லை கவிநேசன் அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(இந்நூல் வாழ்த்துரையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மைத்துறைத் தலைவர் டாக்டர்.பா.ராஜசேகரன்)


விலை: ரூபாய்.70/-

Post a Comment

புதியது பழையவை

Sports News