ஐ.ஏ.எஸ்.முதல்நிலைத்தேர்வு (Paper–II)

புத்தகத்தைப்பற்றி…

நெல்லை கவிநேசன் எழுதிய ‘நீங்களும் கலெக்டர் ஆகலாம்’ என்னும் தொடர்,2000ஆம் ஆண்டு தினத்தந்தி இளைஞர் மலரில் தொடராக வெளிவந்தது.அதனைத்தொடர்ந்து,‘ஐ.ஏ.எஸ்.கனவல்ல நிஜம்’ என்னும் தொடர் சுமார் 194 வாரங்கள் (3 ஆண்டுகள்,9 மாதங்கள்)தினத்தந்தி மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளிவந்தது.பின்னர்,கனவல்ல நிஜம் என்னும் கட்டுரைத்தொடர் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களாக வெளிவந்தன.அவற்றுள் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வின் (Preliminary Examination) இரண்டாம்தாள் (Paper-II) எழுத உதவும்வகையில் வடிவமைக்கப்பட்ட புத்தகம் “ஐ.ஏ.எஸ். முதல்நிலைத்தேர்வு (Paper-II)” என்னும் நூல் ஆகும்.

இந்நூலில் சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய பொதுவான விளக்கம்,திறன் அறியும் தேர்வில் இடம்பெறும் புரிந்துகொள்ளும் திறன் (Comprehension Skill),காரணம் அறிதல் மற்றும் பகுத்தாய்வுத் திறன் (Logical Reasoning and Analytical Ability),முடிவெடுக்கும் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் திறன் (Decision Making and Problem Solving Skills),பொது புத்திக்கூர்மைத்திறன் (General Mental Ability),புள்ளி விவரத்தைப் புரிந்துகொள்ளுதல் (Data Interpretation Skill),ஆங்கில மொழியை அறிந்துகொள்ளும் திறன்கள் (English Language Comprehension Skills)ஆகியவற்றைப்பற்றிய விரிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.மேலும்,ஏராளமான பயிற்சி வினாக்களும் முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.



விலை: ரூபாய்.250/-


Post a Comment

புதியது பழையவை

Sports News