நீங்களும் சிறந்த நிர்வாகி ஆகலாம்


புத்தகத்தைப்பற்றி…

சிறிய வணிக நிறுவனம்முதல் பெரிய தொழில் நிறுவனங்கள்வரை நிர்வாகம் (Administration) அல்லது மேலாண்மை (Management) என்பது தேவையான ஒன்றாகும். மேலாண்மையின் முக்கிய செயல்பாடுகளெல்லாம் திட்டமிடுதல் (Planning), அமைப்பு ஏற்படுத்துதல் (Organising), பணியாளர் நிர்வாகம் (Staffing), வழிகாட்டுதல் (Directing) மற்றும் கட்டுப்படுத்துதல் (Controlling) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. இருப்பினும் திறன்வாய்ந்த நிர்வாகி அல்லது மேலாளரின் தன்மையையும், திறமையையும் பொறுத்தே மேலாண்மையின் சிறப்புச் செயல்பாடுகள் அமைகிறது.

நிர்வாகத் துறையில் வெற்றி காண விரும்புபவர்கள், தாங்கள் எந்தெந்த செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து “நீங்களும் சிறந்த நிர்வாகி ஆகலாம்” என்னும் இந்தநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக நிர்வாகத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு உதவும்வகையில் இந்தியாவில் காணப்படும் பல மேலாளர்களை இந்த நூலில் புதிய பாணியில் வகைப்படுத்தி நெல்லை கவிநேசன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலை நாட்டு மேலாண்மை தத்துவங்களையே பின்பற்றி வருகின்ற தொழில் நிறுவனங்களில், நம் இந்திய மக்களின் மனநிலைக்குஏற்ப நிர்வாகச் செயல்பாடுகள் அமைத்துக்கொண்டால், சிறந்த நிர்வாகி ஆகலாம் என்னும் கருத்தை அழுத்தமாகச் சொல்லும் அற்புதமாக நூலாக இந்தநூல் திகழ்கிறது.

தொழில், நிர்வாகத் துறையிலுள்ள அனைவருக்கும் பயனுள்ள வகையில் அன்றாட வாழ்க்கையில் ஒத்துப்போகக்கூடிய சிறப்பான நடையில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்தநூலில் இடம்பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.


விலை: ருபாய்.60/-


Post a Comment

புதியது பழையவை

Sports News