வேலை வழங்கும் படிப்புகள்


புத்தகத்தைப்பற்றி…

1992ஆம் ஆண்டுமுதல் கல்வி வழிகாட்டல் நிகழ்வுகளை நடத்தியும், ஊடகங்களில் மேற்படிப்புப் பற்றிய தொடர் கட்டுரைகளையும் எழுதி வருபவர் நெல்லை கவிநேசன். 1992ஆம் ஆண்டுமுதல் நெல்லை தினகரன் நாளிதழில் தொடர்ந்து 200 வாரங்களுக்குமேல் மேற்படிப்புக்கு யோசனைகள் என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி சாதனை படைத்தவர். 1995ஆம் ஆண்டு இவர் எழுதிய பிளஸ் 2 முடித்தபின் என்ன படிக்கலாம்? என்ற புத்தகத்தை சென்னை வளர்தமிழ் பதிப்பகம் வெளியிட்டது. 1995 ஆம்ஆண்டு சன் டி.வி.யில் முதன்முதலில் கல்வி சம்பந்தப்பட்ட பேட்டியளித்து தொலைக்காட்சிமூலம் கல்வி பற்றிய தகவல்களை வெளிக்கொணர்ந்தார். பின்னர், ஜெ.ஜெ. டி.வி.மூலம் வாரம்தோறும் தொலைக்காட்சி நேயர்களின் கேள்விக்கு பதில்கள் வழங்கி கல்வித்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நெல்லை கவிநேசன்.
 
இப்போது - பிளஸ்2 படித்து முடித்தப்பின்பு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற கேள்விக்குறியை மனதில் தாங்கிவரும் பிளஸ் 2 மாணவர்கள் ஏராளம். இத்தகைய மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட தகவல் களஞ்சியம்தான் “வேலை வழங்கும் படிப்புகள்” என்னும் இந்தநூல் ஆகும். பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், வேளாண்மை படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகள், கலை அறிவியல் படிப்புகள், தகவல் தொழில்நுட்ப படிப்புகள், வணிக படிப்புகள், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகள், சட்ட படிப்புகள், உடற்கல்வியியல் படிப்புகள் என பல்வேறு துறைசார்ந்த படிப்புகள் பற்றிய விவரங்கள் இந்தநூலில் இடம்பெற்றுள்ளது.
 
இவைதவிர, விமானத்துறை படிப்புகள், சிற்பக்கலை படிப்புகள், தொலைக்காட்சித் துறை படிப்புகள், தோல் தொழில்நுட்பப் படிப்புகள், அச்சுத் தொழில்நுட்ப படிப்புகள் என பல்வேறுவிதமான படிப்புகளைப் பற்றிய தகவல்களும் இந்நூலில் உள்ளன. இந்தப் படிப்புகளின் பெயர்கள் என்ன? அந்தப் படிப்புகளில் என்னென்ன பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. அந்தப் படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் எவை? என்னும் விரிவான விளக்கமும், இடம்பெற்றுள்ளது.
 
நிறைவாக, மாணவ-மாணவிகளின் உயர்கல்விக்கு உதவும் வங்கிகளில் கல்விகடன் பெறுவதற்கான வழிமுறைகளும் இந்நூலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவும் விதத்தில் இந்தநூலை அனுபவம் வாய்ந்த பேராசிரியர் நெல்லை கவிநேசன் உருவாக்கியுள்ளார்.

விலை:ருபாய்.100/-

Post a Comment

புதியது பழையவை

Sports News