வெற்றிதரும் மேலாண்மை


புத்தகத்தைப்பற்றி…

எந்த ஒரு நிறுவனத்தில் மேலாளர்களாகப் பணிபுரிபவர்களுக்கும், இயக்குநர்களாக இருப்பவர்களுக்கும் மேலாண்மைத் திறன் இன்றியமையாத தேவை ஆகும். இதனாலேயே இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மேலாண்மைக் கல்விக்கு குறிப்பிட்ட இடம் அளிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலும் தொழில் முனைவோரின் பிள்ளைகள், பெரிய நிறுவனங்களின் மேலாளர்களின் பிள்ளைகள் இத்தகைய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு படிக்க அனுப்பப்படுகிறார்கள்.
 
காலங்காலமான மேலாண்மை நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்களின் வெற்றி, தோல்விக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நேரடியாக தொழில் முனைவோருக்கு பயன்படுபவை ஆகும். ஆனால் இவை அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளன.

தமிழகத்தின் தொழில்முனைவோர் பெரும்பாலும் தமிழில் படிப்பதையே வசதியாக நினைக்கின்றனர். அவர்களுக்கு ஆங்கிலம் படிக்க முடியும் என்றாலும், தமிழில் படித்து எளிதில் புரிந்துகொள்ள முடிவதைப்போன்று ஆங்கிலத்தில் புரிந்துகொள்ள முடிவது இல்லை. அவர்களுக்கு இந்தநூல் பெரிய அளவில் பயன்படும்.
 
மேலாண்மைத் துறை தொடர்பான நுட்பமான செய்திகளை இந்தநூல் எளிமையாக எவருக்கும் புரியும் வகையில் தருகிறது. இதை எழுதி இருக்கும் பேராசிரியர் நெல்லை கவிநேசன் அவர்கள் தமிழ்நாடு அறிந்த சிறந்த மேலாண்மை அறிஞர். படிப்பு தொடர்பான வழிகாட்டல் செய்திகளையும் ஏராளமாக தினத்தந்தி போன்ற நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர். இவை தொடர்பான பயிலரங்குகளிலும் பங்குகொண்டு பயிற்சி அளிப்பவர்.
 
தமிழ்நாட்டிலேயே முனைவர் நெல்லை கவிநேசன் ஒருவர்தான் தொடர்ந்து வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் தேவையான நூல்களை சலிக்காமல் எழுதிவரும் ஒரே கல்லூரிப் பேராசிரியர். இந்த நூலைப் படிப்பவர்கள், எம்.பி.ஏ., படிக்காமலேயே எம்.பி.ஏ., பாடங்களைப் படித்த உணர்வை அடைய முடியும். பல நுணுக்கமான செய்திகளைக் கற்றுக்கொள்ள முடியும். 
தொழில் முனைவோருக்கும், மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கும் இந்தநூல் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும். இந்தநூலை மிகச் சிறப்பாக எழுதி இருக்கும் பேராசிரியர் நெல்லை கவிநேசன் அவர்களுக்கு என்னுடைய அன்பான பாராட்டுகள்.  

[“வெற்றிதரும் மேலாண்மை நூல்” அணிந்துரையில் வளர்தொழில் ஆசிரியர் க.ஜெயகிருஷ்ணன்.]
இந்த நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த மேலாண்மையியல் நூல் என்ற பாராட்டும், தமிழக அரசின் பரிசும் பெற்ற நூல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
விலை: ருபாய்.150/-

Post a Comment

புதியது பழையவை

Sports News