TNPSC Group – IV எளிதில் வெற்றி பெறலாம்


புத்தகத்தைப்பற்றி…

தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகளில் படித்த பல இளைஞர்கள், அரசு வேலை கிடைக்காதா? என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். பல்வேறு கல்வி நிலையங்களில் படித்த இளைஞர்களின் தகுதிகளையும், திறமைகளையும் அறிந்துகொள்வதற்காக தேர்வு நடத்தி, தகுதியானவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு பணிவழங்கும் பொறுப்பை டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அமைப்பு பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) படித்து முடித்தவர்களுக்காக நடத்தும் தேர்வுதான் குரூப்-IV தேர்வு ஆகும்.

  குரூப்-IV தேர்வை முறைப்படி எழுதுவதற்கு எப்படி தயாரிப்பு முறைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்? என்பதை விளக்கமாக வழங்கும் நூல்தான் நெல்லை கவிநேசன் எழுதிய TNPSC Group – IV எளிதில் வெற்றி பெறலாம் என்னும் நூல் ஆகும். இந்தநூலில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-IV பற்றிய விரிவான தகவல்கள், பொதுஅறிவை வளர்ப்பது எப்படி? பொதுஅறிவு தகவல்கள், தமிழக தகவல்கள், உலகில் முக்கியமானவைகள், இந்தியா சில தகவல்கள் ஆகிய தலைப்பில் முக்கியமான பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தேர்வில் இடம்பெறும் பொதுஅறிவு மற்றும் பொதுத்தமிழ் தேர்வில் இடம்பெறும் முக்கிய வினாக்கள், அவற்றிற்கான விடைகள் ஆகியவையும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


Post a Comment

புதியது பழையவை

Sports News