TNPSC Group– II


புத்தகத்தைப்பற்றி…

போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் சிறந்த தகுதியும், நல்ல திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்படுகிறது. தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து அரசுப் பணியில் இணைத்துக்கொள்ள தமிழக அரசு பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டித் தேர்வுகளில் சார்பதிவாளர், நகராட்சி ஆணையர், தலைமை செயலகப் பதவிப் பிரிவு அலுவலர், தொழில்துறை உதவி ஆய்வாளர் போன்ற பல பதவிகளுக்காக நடத்தப்படும் தேர்வுதான் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணியாளர் தேர்வு-I (Combined, Subordinate Services Examination) ஆகும்.

இந்தத் தேர்வை எளிதில் சந்தித்து வெற்றிகாணும் வகையில் நெல்லை கவிநேசன் எழுதியுள்ள நூல் “TNPSC Group-II” ஆகும். இந்நூலில் இந்தத் தேர்வு பற்றிய விரிவான விளக்கமும், பொதுஅறிவு, பொதுத்தமிழ் கேள்விகளும், பதில்களும் இடம்பெற்றுள்ளன. இவைதவிர, பொதுத் தகவல்கள், முக்கிய கடல்கள், முக்கிய தினங்கள், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் விரிவாக்கம், நோபல் பரிசுபெற்ற இந்தியர்கள், சர்வதேச அமைப்புகள், முக்கிய வரலாற்று நிகழ்வுகள், சாதனையாளர்கள்-கண்டுபிடிப்புகள், நதிகள்-நகரங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவைதவிர, இணைத்துப்பாருங்கள், தகவல்துளிகள், ஆங்கிலக்கேள்விகள் ஆகியவை நூலின் சிறப்புக்கு உறுதுணையாய் அமைகின்றன. ஒருங்கிணைந்த சார்நிலைப் பணியாளர் தேர்வு-Iல்கேட்கப்பட்ட கடந்த ஆண்டு கேள்வித்தாளும் போட்டியாளர்களுக்கு உதவும்வகையில் இணைக்கப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

விலை: ரூபாய்.200/-


Post a Comment

புதியது பழையவை

Sports News