பொதுத் தமிழ்


புத்தகத்தைப்பற்றி…

“பொதுத்தமிழ்” என்னும் இந்நூல் அனைத்து அரசு பொதுத்தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயனுள்ள நூலாக திகழ்கிறது. இந்நூலை எழுதிய நெல்லை கவிநேசன், தமிழின் அடிப்படை இலக்கணம், போட்டித்தேர்வுகளில் இடம்பெற்ற தமிழ்மொழி கேள்விகள் மற்றும் அதற்கான விடைகளை தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக-பொருத்துதல், தொடரும் தொடர்பும் அறிதல், பிரித்தெழுதுதல், சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான சொற்றொடரை உருவாக்குதல், விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல், பொருந்தாச்சொல், பிழைதிருத்தம்- சந்திப்பிழை நீக்குதல், மரபுப்பிழை நீக்குதல், வழுஉச் சொற்களை நீக்குதல், பிறமொழி சொற்களை நீக்குதல் ஆகியவற்றிற்கான விளக்கங்களை வழங்கியும், கேள்விப்பதில் பாணியில் தெளிவு ஏற்படும்வண்ணம் விவரித்தும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல், ஓரெழுத்து மொழி, ஒலி வேறுபாடறிந்து பொருளை பொருத்துதல், அகர வரிசையிலுள்ள சொற்களை அமைத்தல், இலக்கண குறிப்பறிதல், உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்ந்தெடுத்தல், பெயர்ச்சொல்லின் வகையறிதல், வாக்கியங்களின் வகையறிதல், தன்வினை-பிறவினை, எதுகை, மோனை, இயைபு ஆகியவற்றுக்கான இலக்கண நெறிமுறைகளும் பொதுத்தமிழ் என்னும் இந்நூலில் அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி.தேர்வுகளில் கேட்கப்பட்ட பொதுத்தமிழ் பாட வினாக்கள் மற்றும் விடைகள் ஆகியவையும் இந்நூலில் இணைக்கப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பை உணர்த்துகிறது.


விலை: ரூபாய்.90/-

Post a Comment

புதியது பழையவை

Sports News