பொது அறிவு


புத்தகத்தைப்பற்றி…

அனைத்து அரசு பொதுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும்வகையில் நெல்லை கவிநேசன் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட நூல் “பொதுஅறிவு” ஆகும்.

இந்நூல், பொதுஅறிவை தெரிந்துகொள்வோம் என்னும் தலைப்பில் ஐந்து பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில்-தமிழக மாவட்டங்கள், மதங்கள், குப்தர்கள், பல்லவர்கள், சோழர்கள், பாண்டிய மன்னர்கள், இந்திய பண்பாடு, டெல்லி சுல்தான்கள், முகலாயர் கட்டிட கலை, ஐரோப்பியர்கள் வருகை, ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றுதல், சமய மற்றும் சமுதாய சீர்திருத்த இயக்கங்கள், பிரிட்டிஷ் நிர்வாகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய அரசியல் அமைப்பு, மாநில ஆளுநர், முதலமைச்சர், மக்களவை, மாநிலங்களவை, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகிய தலைப்புகளில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாவது பிரிவில் - இந்தியாவின் அமைவிடம், இந்திய நதிகள், காலநிலை, மண் வகைகள், இயற்கைத் தாவரம் ஆகிய தகவல்கள் உள்ளன. மூன்றாவது பிரிவில் - பயிர்கள் விளையும் சூழ்நிலை மற்றும் இடங்கள், நீர்பாசனம், தாதுபொருட்கள், வேளாண்மை, முக்கியத் தொழிற்சாலைகள் ஆகியன பற்றியும், நான்காம் பிரிவில் - இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள், வேலையின்மைக்கு காரணங்கள், அரசு கொள்கைகள், பணவீக்கம், தொழில்துறை, வங்கிகள், இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் இதர தகவல்கள் ஆகியவைபற்றியும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஐந்தாவது பிரிவிலும்- இந்திய ராணுவம், அணு மின்சாரம், விண்வெளி ஆராய்ச்சி, இந்திய இரயில்வே, இந்திய நடனங்கள், ஐக்கிய நாடுகள் சபை, சார்க் நாடுகள் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், முக்கிய பொதுஅறிவுக் கேள்விகள் - விடைகள் ஆகிய தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது இந்நூலுக்கு மகுடம் சூட்டுவதுபோல அமைந்துள்ளது. 

விலை: ரூபாய்.100/-


Post a Comment

புதியது பழையவை

Sports News