சிரிப்போம் சிந்திப்போம்


புத்தகத்தைப்பற்றி…

சிரிப்போடு சிந்தனைகளை இணைத்து நல்ல கருத்துக்களைக் கூறும் விதத்தில் உருவாக்கப்பட்ட நூல் இது. சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள், கதைகள் ஆகியவற்றை இணைத்து அமைக்கப்பட்ட இந்தநூல் எல்லோருக்கும் நிச்சயம் பயன்படும்.

“சிரிப்போம் சிந்திப்போம்” என்னும் நூல் படித்தவர்களுக்கும், பாமரர்களுக்கும் எளிதில் புரியும் வகையில் பயனுள்ள கருத்துக்களை உள்ளடக்கிய நூல் ஆகும். சின்னஞ்சிறு கதைகள்மூலம் வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களையும், வாழ்க்கை நெறிகளையும் தருகின்ற விவேக சிந்தாமணியாக இந்தநூல் அமைந்துள்ளது. தனிதமனித வாழ்வியலின் சின்னஞ்சிறு அம்சங்கள்தான் உயரிய கலாச்சாரம்கொண்ட சமுதாயத்தை உருவாக்குகிறது. சுயநலம் வளரும் இந்தக் காலக்கட்டத்தில் குட்டிக் கதைகள்மூலம் சமுதாயக் கோட்பாடுகளை விளக்கியிருக்கும் பாங்கு நெல்லை கவிநேசனின் தனிச்சிறப்பாகும்.

சிரித்து மகிழ்வதோடு மட்டுமல்லாமல், சிந்திப்பதற்கும், சிந்தனையை செயலாக்கம் செய்வதற்கும் தேவையான அறிவுப்பூர்வமான கருத்துக்களை சுமந்து இந்தநூல் சிந்தைக்கு விருந்தாகிறது. மொத்தம் 34 தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எதிர்ப்புகள் - சில எதிர்பார்ப்புகள், நாவினால் சுடலாமா?, வழிப்பறிகாரர்கள்,
வீண் பெருமை பேசி..., நம்மை வீழ்த்தும் ஆயுதம், பிரச்சினைகளை விளக்குவோம் என்ற தலைப்புகள் சிரிப்பை வரவழைத்து சிந்தனையைத் தூண்டுகிறது.  

விலை: ரூபாய்.50/-Post a Comment

புதியது பழையவை

Sports News