நம்பிக்கை நம் கையில்


புத்தகத்தைப்பற்றி…

நல்ல நம்பிக்கையுடன்கூடிய வெற்றி வாழ்க்கையில் எங்கே கிடைக்கும்? என தேடி அலைந்து எதிர்பார்த்ததுபோல் வாழ்க்கை அமையாமல், மகிழ்வான வாழ்க்கையை சிலர் இழந்துவிடுகிறார்கள். நம்பிக்கை எங்கே இருக்கிறது? என்பதைப் புரிந்துகொண்டவர்கள் தங்கள் வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்கிறார்கள். “நம்பிக்கை நிறைந்த இதயம் மனநிறைவின் மணிமகுடம்“ என நம்பி செயல்படுபவர்கள் மகிழ்வோடு வாழ்கிறார்கள்.

“வாழ்க்கையில் நம்பிக்கை நம் கையில்தான் இருக்கிறது” என்பதை உணர்த்தும் விதத்தில் இந்த நூல் அமைந்துள்ளது. வாய்ப்புகளைக் கண்டறியவும், திட்டமிட்டு செயல்படவும், முடிவுகள் எடுக்கப் பழகிடவும், மாற்றங்களை சந்திக்க மனநிலையை உருவாக்கவும், திறமைகளை வளர்க்கும் பயிற்சிகளைத் தெரிந்துகொள்ளவும் இந்தநூல் பக்கபலமாக அமையும்.

“வெற்றி என்பது நம் எண்ணத்தைப் பொறுத்திருக்கிறது” என்பது மாவீரன் நெப்போலியன் கருத்து. இந்தக் கருத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள “நம்பிக்கை நம் கையில்” என்னும் இந்நூல் நிச்சயம் உதவும்.


விலை : ரூபாய்.50/-


Post a Comment

புதியது பழையவை

Sports News