வெற்றியின் ரகசியங்கள்


புத்தகத்தைப்பற்றி…

“வாழ்க்கையில் முன்னேற வேண்டும்“ என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால், ஒரு சிலரால் மட்டுமே வெற்றிபெற்று தங்கள் வாழ்க்கையை சிறந்ததாக மாற்ற இயலுகிறது. வெற்றியின் நுணுக்கங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்களுக்கு எந்தத் துறையிலும் வெற்றி பெறுவது எளிதாகிறது. எனவே-மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலருக்கும் பயன்படும் விதத்தில் வெற்றிக்கான வழிமுறைகள் இந்தநூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ‘தன்னம்பிக்கை’ தரும் பலவித கருத்துக்கள், சின்னஞ்சிறு கதைகள், உண்மை நிகழ்வுகள், தன்னம்பிக்கையூட்டும் படங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக “வெற்றியின் ரகசியங்கள்” என்னும் தலைப்பில் இந்த நூல் வடிவம் பெற்றுள்ளது.

‘வெற்றி என்பது ஒருவர் செய்யும் செயல்களின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது’ என்று முதல் அத்தியாயத்தில் அருமையாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் செய்ய வேண்டிய செயல்களை படிப்பவர் மனதில் நிலைநிறுத்தும் வண்ணம், எளிய நடையில் சொல்லியிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். ஆசிரியர், தான் சொல்லவந்த கருத்துக்களை குட்டிக்கதைகள்மூலமாகவும், வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த மன்னர்கள், தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அனுபவக் கூற்றுகள் மூலமாகவும், நமக்குத் தெரிந்த பழமொழிகள், திருக்குறள் வாயிலாகவும் சொல்லியிருப்பது நூலுக்கு மேலும் சிறப்பைத் தருகிறது.விலை: ரூபாய். 50/-


Post a Comment

புதியது பழையவை

Sports News