நேரத்தை பணம் ஆக்கலாம்


புத்தகத்தைப்பற்றி…

நேர மேலாண்மை பற்றி பல ஆங்கில நூல்கள் வெளிவந்துள்ளபோதிலும் அந்த நூல்களுக்கு இணையாக எழுதப்பட்டுள்ள நூல் “நேரத்தைப் பணம் ஆக்கலாம்”.

நேரத்தைத் திட்டமிடுவது எப்படி?, நேரத்தை மிச்சப்படுத்துவது எப்படி? என நேர நிர்வாகம்பற்றிய தெளிவான தகவல்கள் நூல் வடிவம் பெற்றுள்ளது. நேரந்தான் இல்லையே!, அவசரமா? அவசியமா?, நேரத்தை உருப்படியாக பயன்படுத்த யோசனை, தொலைபேசி தொடர்புகள், அவசர கோலங்கள், அளவான பேச்சு, வேலையைப் பகிர்ந்தளிக்கலாம், நேரச்செலவு ஆய்வு அட்டவணை என பல்வேறு தலைப்புகளிலான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

இளைஞர்களுக்கு-குறிப்பாக மாணவ-மாணவிகளுக்கு உதவும்விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல், பெரியவர்களுக்கும், உறுதுணையாய் அமையும் விதத்தில் உள்ளது.

திட்டமிட்டு நேரத்தை செலவழிக்கும் முறையை தெள்ளத்தெளிவாக, எளிமையான முறையில், இனிய நடையில் எழுதியுள்ளார் பேராசிரியர் நெல்லை கவிநேசன்.


விலை: ரூபாய்.30/-

Post a Comment

புதியது பழையவை

Sports News