குழு விவாதம்


புத்தகத்தைப்பற்றி…

“குழு விவாதம்” என்னும் இந்த நூல் போட்டியாளர்களின் தகுதிகளையும், திறமைகளையும் மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் சரியான நபர்களை பணிக்குத் தேர்ந்தெடுப்பதற்காக வேலை வழங்கும் நிறுவனங்கள் நடத்தும் தேர்வு ஆகும். இந்தநூலில் குழு விவாதம் என்றால் என்ன? குழு விவாதம் எதற்காக நடத்தப்படுகிறது? அந்தக் குழு விவாதத்தின்மூலம் என்னென்ன தகுதிகளை மதிப்பீடு செய்கிறார்கள்? குழு விவாதத்தில் சிறந்த முறையில் கலந்துகொள்வது எப்படி? என்னும் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

குழு விவாதம் என்பது குழுவாக அமர்ந்துகொண்டு ஒரு கருத்தைப்பற்றி கலந்துரையாடுவதைக் குறிக்கும். போட்டியாளர்களின் பழகும்திறன் (Interpersonal Skill), தகவல் தொடர்புத்திறன் (Communication Skill), சூழ்நிலையோடு ஒத்துப்போகுத் தன்மை (Capability to cope with the Environment), தெளிவான சிந்தனை (Clarity of Thought), பகுத்தறியும் பண்பு (Logical Reasoning)போன்ற குணங்களைக் கண்டறிவதற்காக இந்த குழு விவாதம் நடத்தப்படுகிறது என்பதை இந்தநூல் தெளிவாக்குகிறது.

குழு விவாதத்தில் கலந்துகொள்ள தேவையான பண்புகள், கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், குழு விவாத நுணுக்கங்கள், குழு விவாத தலைப்புகள், குழு விவாதம் நடைபெறும் இடம் மற்றும் நேரம், தயாரிப்புப் பணிகள், குழு விவாதத் தலைவர்கள், குழு விவாத குறிப்புகள் என பலவித தலைப்புகளில் குழு விவாதம்பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் நெல்லை கவிநேசன்.

விலை: 40/-

Post a Comment

புதியது பழையவை

Sports News