தலைமை நம் கையில்


புத்தகத்தைப்பற்றி…

“தலைமைப் பதவி” என்பது ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் வழங்கும் பதவி ஆகும். இந்தத் தலைமைப் பதவியைப் பெற பல்வேறு சூழல்களில் பலரும் முயன்று வருகிறார்கள். அறிந்தோ, அறியாமலோ தலைமைப் பதவியை சிலர் வகிக்க வேண்டிய கட்டாயச்சூழலும் உருவாகிவிடுகிறது. குடும்பம், அலுவலகம், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் என வெவ்வேறு நிலைகளில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.

அரசியலிலும், தலைமைப் பதவியைப் பெற தொண்டர்கள் பலரும் முயன்று வருகிறார்கள். பிறக்கும்போதே சிலருக்கு பதவி கிடைத்துவிடுகிறது. ஆனால், சிலர் அனுபவத்தின்மூலமாக நாள்தோறும் செதுக்கப்பட்டு தலைவர்களாக உருவாக்கப்படுகிறார்கள்.

சேவை மனப்பான்மை கொண்டவர்களில் பலர், தலைமைப் பதவியைப் பெற்று, தானும், மற்றவர்களும் மகிழ்வுடன் வாழ உதவியிருக்கிறார்கள். தலைமைப்பதவி தரும் சுகங்களை அனுபவிக்க மட்டுமே தயார்நிலையில் இருப்பவர்கள், நிம்மதியாக அந்தப் பதவியை அலங்கரிக்க இயலாமல் நிம்மதியை இழக்கிறார்கள்.

தலைமைப் பதவிக்கு ஆசைப்படுபவர்கள், தாங்கள் சார்ந்துள்ள துறையில் நேர்மையோடு உழைத்தால், தலைமைப் பதவியை எளிதில் பெற்றுவிடலாம். அரசியல் தலைவர்கள் தங்கள் தலைமைப் பதவியை தியாக உணர்வோடுகூடிய உழைப்பின்மூலம் பெற்று, உலகப் புகழ் பெற்றிருக்கிறார்கள்.

தலைமைப் பதவியைப் பெறுவதற்கு என்னென்ன வழிகளில் முயற்சி செய்ய வேண்டும்? என்பதற்கு வாழ்ந்து காட்டியவர்கள் நமக்கு வழிகாட்டுகிறார்கள். அந்தத் தலைவர்களின் அனுபவங்கள் நமக்கு வாழ்க்கைப் பாடங்கள் ஆகும். அவர்கள் காட்டிய வழியில் நாம் நடந்தால், தலைமை நம் கையில் என்பது உறுதியாகும். இதனைத் தெளிவாக விளக்கும் நூல்தான் “தலைமை நம் கையில்” என்னும் இந்த நூல் ஆகும். மாணவ-மாணவிகளும், இளைஞர்களும், இளைய தலைவர்களும் வரலாற்றுப் பெட்டகமாக பாதுகாக்கப்பட வேண்டிய நூலாக இந்நூல் அமைந்துள்ளது. 


விலை: ரூபாய். 50/-

Post a Comment

புதியது பழையவை

Sports News