இண்டர்வியூ எளிதில் வெற்றி பெறலாம்


புத்தகத்தைப்பற்றி…

வேலைவாய்ப்பை தேடும் இளைஞர்களுக்காக “இண்டர்வியூ எளிதில் வெற்றி பெறலாம்” என்னும் இந்த நுலை உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியரும், பேராசிரியருமான திரு.நெல்லை கவிநேசன் இண்டர்வியூவின்போது நடந்துகொள்ள வேண்டிய முறைகள், அதற்குத் தேவையான முன்னேற்பாடுகள், கேள்விகள் கேட்கப்படும் விதங்கள், பதில் தரவேண்டிய பாங்கு என்று ஒவ்வொருவிஷயமாக நுணுக்கங்களை ஆய்வுசெய்து அழகிய முன்னுதாரங்களுடன் விளக்கம் தந்துள்ளவிதம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இண்டர்வியூ எப்படியெல்லாம் நடத்தப்படுகிறது? நிறுவனங்கள் எப்படிப்பட்ட நபர்களைத் தேர்வு செய்கிறார்கள்? இண்டர்வியூ நடத்தும் அதிகாரிகளின் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது? எப்படிப்பட்ட பதில்களால் அவர்களை திருப்படுத்தமுடியும்? அகாடமிக் கல்வித்தகுதிகள் தவிரவும், சிறப்புத்திறமைகளை நிறுவனங்கள் எவ்வாறு எதிர்பா£க்கின்றன? அவற்றை வளர்த்துக்கொள்வது எப்படி? இண்டர்வியூவின்போது அவற்றை வெளிப்படுத்தி கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது எப்படி? என்பன போன்ற அரிய விஷயங்கள் புதியதாய் வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு அதிக உதவியாக அமைந்துள்ளன.

எனவே, பல இண்டர்வியூவில் கலந்துகொண்டர்கள்கூட ஏற்கனவே தாங்கள் செய்த தவறுகளை திருத்திக்கொள்ளவும், இண்டர்வியூவின்போது உற்சாகமாக பங்கேற்கவும் உதவும்வகையில் இந்தநூல் உருவாக்கப்பட்டுள்ளது. சின்னசின்ன உதாராணங்களால் அரிய பெரிய விஷயங்களை விளக்க முற்பட்டிருக்கும் நூலாசிரியரின் பாங்கு படிப்பவர்களுக்கு நல்ல உரமாக அமைந்துள்ளது.

தமிழில் இதுபோன்ற நூல்கள் குறைவு. நூலாசிரியர் நெல்லை கவிநேசன் அரிதில் முயன்று இனிதாய் வழங்கியுள்ளார். வளரும் தலைமுறையினர் அவசியம் படிக்கவேண்டிய நூல் இது.

(ஜெயா பிளஸ் தொலைக்காட்சி புத்தக விமர்சனம் பகுதியில் இடம்பெற்ற மதிப்புரை)

விலை: ரூபாய்.80 /-

Post a Comment

புதியது பழையவை

Sports News