நெல்லை கவிநேசன் - வாழ்த்துக் கவிதை

இலங்கையில் - தினத்தந்தி
 நெல்லை கவிநேசன் எழுதி மாலை மலர் இதழில் வெளியான வாழ்த்துக் கவிதை

 
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் நெருக்கமான உறவு நிலவுகிறது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் நீண்டகால கனவை பூர்த்தி செய்யும் வகையில் “தினத்தந்தி” தனது புதிய பதிப்பை இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வெளியிடுகிறது.

இலங்கையில் அதிசிறந்த ஊடக சேவையாற்றிவரும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான ‘வீரகேசரி’ தமிழ் நாளிதழுடன் இணைந்து ‘தினத்தந்தி’ வெளியாகிறது. பாரம்பரியம் மிக்க ‘வீரகேசரி’ 1930ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 89 ஆண்டுகளாக இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களுக்கு நாள்தோறும் செய்திகளை வழங்கி வருகிறது.

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தினத்தந்தி’, தனது பவள விழாவை சிறப்பாக கொண்டாடி, 77 ஆண்டுகளாக தமிழ் மக்களின் இதயத் துடிப்பாக விளங்கி வருகிறது. எல்லைகளைத் தாண்டி ‘தினத்தந்தி’ தனது இலங்கை பதிப்பை ‘வீரகேசரி’யுடன் இணைந்து வெளியிடுகிறது.

தினத்தந்தி இலங்கை பதிப்பின் இதழ் 24.01.2019 அன்றுமுதல் வெளியிடப்பட்டது. தினத்தந்தி இலங்கை பதிப்பின்மூலம் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள செய்திகள் இலங்கை மக்களுக்கு தாமதம் இன்றி உடனுக்குடன் கிடைக்கிறது.

Post a Comment

புதியது பழையவை

Sports News