அரிமா சங்கம் சார்பில் - நெல்லை கவிநேசனுக்கு பாராட்டு

அரிமா சங்கம் சார்பில்
நெல்லை கவிநேசனுக்கு பாராட்டு
Email: nellaikavinesan25@gmail.com
Website: nellaikavinesan.com
 திருச்செந்தூர், சிட்டி அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் வருகை விழா 26.01.2019 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு திருச்செந்தூர் தெய்வா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர், டாக்டர்.S.நாராயணராஜன் M.B.A.,Ph.D., (நெல்லை கவிநேசன்) அவர்களுக்கு, கல்வி, எழுத்து, சமூக சேவை ஆகியவற்றைப் பாராட்டி, மாவட்ட அரிமா சங்க ஆளுநர் லயன்.K.G.பிரகாஷ் MJF சிறப்பு பாராட்டிதழ் வழங்கினார்.

     இந்தவிழாவில், பாராட்டுப்பெற்ற டாக்டர்.S.நாராயணராஜன் M.B.A., Ph.D., (நெல்லை கவிநேசன்) அவர்களை, திருச்செந்தூர் சிட்டி அரிமா சங்கத் தலைவர் லயன்.K.மனோகர் ராஜன், செயலர் லயன்.D.A.அமல்ராஜன், பொருளாளர் லயன்.A.K.ராஜரத்தினம், ஓய்வுப்பெற்ற மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி லயன்.டாக்டர்.C.பெர்ணான்டோ ஆகியோர் வாழ்த்தினார்கள்.

Post a Comment

புதியது பழையவை

Sports News